For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ISL 2019-20 : மிரட்டல் அடி.. சென்னை அணி அசத்தல் வெற்றி.. ஹைதராபாத் எஃப்சியை வீழ்த்தியது!

ஹைதராபாத் : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் ஹைதராபாத் எஃப்சி அணி - சென்னையின் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் சென்னையின் எஃப்சி அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 56 ஆம் நாள் ஆட்டம் ஹைதராபாத்தில் உள்ள ஜிஎம்சி பாலயோகி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதல் பாதி ஆட்டத்தைத் வலது புறமிருந்து தொடங்கியது.

ISL 2019-20 : Hyderabad FC vs Chennaiyin FC match 56 report

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் கடுமையாக மோதின. ஆட்டத்தின் 17 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் மார்கோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ஆட்டத்தின் 40 ஆவது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி அணியின் கிரிவெல்லாரோ அற்புதமாக ஒரு கோல் அடித்தார். பின்னர் 43 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் வால்ஸ்கிஸ் ஒரு கோல் அடித்து அசத்தினார். இதையடுத்து ஒரு நிமிடம் கூடுதலாக வழங்கப்பட்டது.

பின்னர் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் சென்னையின் எஃப்சி அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ISL 2019-20 : Hyderabad FC vs Chennaiyin FC match 56 report

இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. 51 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் ஜெர்மனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 62 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியில் மாற்றம் செய்யப்பட்டது. 65 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் வால்ஸ்கிஸ் மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

70 மற்றும் 73 ஆவது நிமிடங்களில் ஹைதராபாத் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. 75 ஆவது நிமிடத்தில் சென்னை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. 87 ஆவது நிமிடத்தில் சென்னை அணியில் மீண்டும் ஒரு மாற்றம் செய்யப்பட்டது.

ISL 2019-20 : Hyderabad FC vs Chennaiyin FC match 56 report

87 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் மார்சிலோனா அதிரடியாக ஒரு கோல் அடித்தார். அதே 87 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் மார்கிலோனாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. பின்னர் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் சென்னையின் எஃப்சி அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Story first published: Saturday, January 11, 2020, 15:07 [IST]
Other articles published on Jan 11, 2020
English summary
ISL 2019-20 : Hyderabad FC vs Chennaiyin FC match 56 report
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X