For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ISL 2019 - 20 : செம கோல் அடித்த கோவா.. ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி!

ஹைதராபாத் : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் ஹைதராபாத் எஃப்சி - எஃப்சி கோவா அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் கோவா அணி ஒரு கோல் அடித்தது. இதையடுத்து 1 - 0 என்ற கோல் கணக்கில் கோவா அணி ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 34 ஆம் நாள் ஆட்டம் ஹைதராபாத்தில் உள்ள ஜிஎம்சி பாலயோகி அதெலட்டிக் மைதானத்தில் ஹைதராபாத் எஃப்சி - எஃப்சி கோவா அணிகள் இடையே நடைபெற்றது.

ISL 2019-20 : Hyderabad FC vs FC Goa match 34 report

இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி வலது புறம் இருந்து ஆட்டத்தைத் தொடங்கியது. ஆட்டத்தின் 8ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் மார்கோ வெளியேற்றப்பட்டு பர்னஸ் களம் இறக்கப்பட்டார்.

இதையடுத்து ஆட்டத்தின் 41 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் கமலுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதி முடிவுக்கு வந்தது. இதில் இரு அணிகளும் கோல் எதுவும் போடாததால் 0 - 0 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றன.

ISL 2019-20 : Hyderabad FC vs FC Goa match 34 report

இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. 49 ஆவது நிமிடத்தில் கோவா அணி வீரருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதே போல் ஆட்டத்தின் 50 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத்தின் கில்ஹாலனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ஆட்டத்தின் 62 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் மற்றும் கோவா அணிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன பின்னர் ஆட்டத்தின் 68 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் மான்விர் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

ஆட்டத்தின் 73 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் நவாசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 76 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் மெர்சிலோனாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 77 மற்றும் 89 ஆவது நிமிடங்களில் ஹைதராபாத் மற்றும் கோவா அணிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

90 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் பௌமசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. அதே 90 ஆவது நிமிடத்தில் கோவா அணியில் மாற்றம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து கோவா அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Story first published: Monday, December 9, 2019, 16:36 [IST]
Other articles published on Dec 9, 2019
English summary
ISL 2019-20 : Hyderabad FC vs FC Goa match 34 report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+