Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சொந்த மண்ணில் முதல் போட்டியில் ஆடும் ஹைதராபாத் எஃப்சி.. கேரளா பிளாஸ்டர்ஸ்-ஐ சமாளிக்குமா?

ஹைதராபாத் : இந்தியன் சூப்பர் லீக் தொடரின் புதிய இடமான ஹைதராபாத்தில் இந்த சீசனின் முதல் ஆட்டம் தொடங்குகிறது.

ஹைராபாத் அணி ஹைதராபாத்தில் உள்ள ஜிஎம்சி பாலயோகி அதெலடிக் மைதானத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சியை எதிர்கொள்கிறது.

ISL 2019-20 : Hyderabad FC vs Kerala Blasters FC match no.14 Preview

தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த ஹைதராபாத் அணிக்கு தனது சொந்த மண்ணில் வெற்றி கிட்டுமா? அதிர்ஷ்டத்தால் ஒரு மாற்றம் ஏற்படுமா? என எதிர்பார்க்கிறது.

ஹைதராபாத் அணியின் அறிமுக வீரர்கள் இந்த லீக்கில் சிறந்த ஓபனிங்கை கொடுக்கவில்லை ஏடிகே மற்றும் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளனர். அந்த அணியில் காயங்கள் மற்றும் இடைநீக்கம் அதிகமாகி வருவதால், பயிற்சியாளர் பில் பிரவுன் ஒரு இக்கட்டான நிலையை சந்தித்து வருகிறார்.

ISL 2019-20 : Hyderabad FC vs Kerala Blasters FC match no.14 Preview

"நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம்,. நாங்கள் ஆரம்பத்திலிருந்தே சீராக பயணம் செய்து வருகிறோம். இறுதியாக, ஹைதராபாத்தை அடைந்த பிறகு, நாங்கள் நன்கு ஓய்வெடுத்தோம். சரி சொந்த மண்ணில் விளையாடும் அடுத்த இரண்டு விளையாட்டுகளும் எவ்வாறு செல்கின்றன என்று பார்ப்போம்" என்று பற்சியாளர் பிரவுன் கூறினார்.

ISL 2019-20 : Hyderabad FC vs Kerala Blasters FC match no.14 Preview

போபோ, கில்ஸ் பார்ன்ஸ், சாஹில் பன்வார் மற்றும் ரஃபேல் கோம்ஸ் போன்ற முக்கிய வீரர்கள் அனைவரும் அணியில் உள்ளனர். மேலும் அவர்கள் மேட்ச் டே அணியில் இடம் பெற தகுதியுள்ளவர்களா என்பதைப் பார்க்க வேண்டும். நட்சத்திர வீரர் மார்செலின்ஹோ ஐஎஸ்எல் போட்டிகளில் தனது நான்காவது சீசனில் இன்னும் அவர் களம் இறங்கவில்லை. பிரேசிலின் தனிப்பட்ட திறமை பிரவுனுக்கு கைகொடுக்க வேண்டும் என்கிறார்.

ISL 2019-20 : Hyderabad FC vs Kerala Blasters FC match no.14 Preview

"எங்களுக்கு காயங்கள் நிறைந்த ஒரு குழு உள்ளது, அதிர்ஷ்டவசமாக மார்சலினோவுக்கு காயம் ஏதும் இல்லை. எங்கள் பெரிய வீரர்கள் சிலர் ஸ்டாண்டில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் திரும்பி வரும்போது ராபின் (சிங்) அதன் பலனைப் பெறுவார். எங்கள் வீரர்கள் காயங்களுக்கான சிகிச்சை பெற்று திரும்பியவுடன் நீங்கள் வித்தியாசத்தைக் காண்பீர்கள்" என்றார் பிரவுன்.

ISL 2019-20 : Hyderabad FC vs Kerala Blasters FC match no.14 Preview

அதிக காயங்களுடன் இருக்கும் மிட்ஃபீல்டர் மரியோ ஆர்க்ஸ் மற்றும் சந்தேஷ் ஜிங்கன் ஆகியோரை ஓரங்கட்டிய பின்னர் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியில் முக்கிய வீரர்கள் இல்லாமல் உள்ளனர்.

"ஹைதராபாத் அணி வீரர்களுக்கு நிறைய காயங்கள் உள்ளன. அதே நேரத்தில் வலுவான ஒரு அணி இல்லாதபோது வெற்றி என்பது அவ்வளவு எளிதானது அல்ல. நாங்களும் மோசமான அணி இல்லை. அதே நேரத்தில் எங்கள் அணியினர் வலுவான வகையில் விளையாடவில்லை என்றே நினைக்கிறேன். தற்போது எங்கள் அணியில் உள்ள வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் தகுதியானவர்கள் இல்லை என்கிறார் கேரள பிளாஸ்டர்ஸ் தலைமை பயிற்சியாளர் ஈல்கோ ஸ்கட்டோரி கூறினார்.

ISL 2019-20 : Hyderabad FC vs Kerala Blasters FC match no.14 Preview

"நாங்கள் கடைசி போட்டியில் தோற்றதற்கு எங்கள் துரதிர்ஷ்டவசமே காரணம் என நினைக்கிறோம். இது ஒரு வேதனையான இழப்பு. நாம் குறைந்தபட்சம் ஒரு புள்ளியையாவது எடுத்திருக்க வேண்டும். மறுபுறம், ஜாம்ஷெட்பூரிடம் தோல்வியடைந்த பின்னர் தற்போது ஹைதராபாத்திற்கு பயணம் செய்துள்ளோம். எனவே, இருஅணிகளும் மூன்று புள்ளிகள் பெற வேண்டும் என நினைக்கிறோம். இது ஒரு அற்புதமான போட்டியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்" என்று டச்சுக்காரர் கூறினார்.

ISL 2019-20 : Hyderabad FC vs Kerala Blasters FC match no.14 Preview

கேரளா அணி அதன் கேப்டன் பார்தலோமெவ் ஒக்பெச்சேவை பெரிதும் நம்பியுள்ளது. மேலும், ஹைதராபாத் அணிக்கு எதிராக ஜெயிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை அவர் கொண்டிருப்பார். அந்த நம்பிக்கையால்தான் அவர் இரண்டு போட்டிகளில் எட்டு கோல்களை அடித்தது எனலாம்.

Photos Courtesy : ISL Media

Story first published: Saturday, November 2, 2019, 19:25 [IST]
Other articles published on Nov 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+