For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ISL 2019-20 : முதல் பாதியில் முன்னிலை பெற்ற கேரளா.. போராடி வென்ற ஹைதராபாத் எஃப்சி அணி!

ஹைதராபாத் : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் இன்றைய கால்பந்து போட்டியில் ஹைதராபாத் எஃப்சி - கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிகளிடையே மோதல் நடைபெற்றது. இதில் ஹைதராபாத் எஃப்சி அணி கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 14 ஆம் நாள் ஆட்டம் ஹைதராபாத் ஜிஎம்சி பாலயோகி அதெலட்டிக் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் ஹைதராபாத் எஃப்சி - கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி மோதின. டாஸ் வென்ற கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணி ஆட்டத்தைத் தொடங்கியது.

ISL 2019-20 : Hyderabad FC vs Kerala Blasters FC match no.14 report

தொடக்கத்தில் இருந்தே கேரளா பிளாஸ்டர்ஸ் அணி அற்புதமாக விளையாடியது. ஆட்டத்தின் 13 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் ஜுவர்லூன் வெளியேற்றப்பட்டு ராஜு களம் இறக்கப்பட்டார்.

ISL 2019-20 : Hyderabad FC vs Kerala Blasters FC match no.14 report

ஆட்டத்தின் 34 அவது நிமிடத்தில் கேரளா அணியில் ராகுல் அற்புதமாக ஒரு கோல் அடித்தார். 45 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் ஹால்டருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கூடுதலாக 2 நிமிடங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் நிறைவு பெற்றது.

இதையடுத்து முதல் பாதி ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ISL 2019-20 : Hyderabad FC vs Kerala Blasters FC match no.14 report

இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. ஆட்டத்தின் 54 நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் மார்கோ அற்புதமாக ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 57 ஆவது நிமிடத்தில் கேரளா அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

ISL 2019-20 : Hyderabad FC vs Kerala Blasters FC match no.14 report

ஆட்டத்தின் 65 ஆவது நிமிடத்தில் ஹைதாராபாத் அணியின் மார்கோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆட்டத்தின் 79 ஆவது நிமிடத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

ISL 2019-20 : Hyderabad FC vs Kerala Blasters FC match no.14 report

80 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் முஸ்தபாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 81 ஆவது நிமிடத்தில் ஹைதாராபாத் அணியின் மார்ஸிரோ ஒரு கோல் அடித்து அசத்தினார்.

ISL 2019-20 : Hyderabad FC vs Kerala Blasters FC match no.14 report

இதையடுத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. இறுதியில் ஹைதராபாத் எஃப்சி அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வென்றது.

Story first published: Sunday, November 3, 2019, 23:13 [IST]
Other articles published on Nov 3, 2019
English summary
ISL 2019-20 : Hyderabad FC vs Kerala Blasters FC match no.14 report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+