Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டிரா செய்த ஹைதராபாத் அணி.. பிளே-ஆஃப் வாய்ப்பை தவறவிட்ட மும்பை சிட்டி!

ஹைதராபாத் : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் ஹைதராபாத் எஃப்சி மற்றும் ‍மும்பை சிட்டி எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தன‌.

ஆறாவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 66வது நாள் ஆட்டம் ஹைதராபாத்தில் உள்ள ஜிஎம்சி பாலயோகி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. கடந்த 13 ஆட்டங்களில் 19 புள்ளிகள் எடுத்து பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்த மும்பை அணியும், கடந்த நான்கு ஆட்டங்களில் தொடர் தோல்வியை தழுவிய‌ ஹைதராபாத் எஃப்சி அணியும் மோதின.

ISL 2019-20 : Hyderabad FC vs Mumbai City FC match 66 report

ஹைதராபாத் அணியை வெல்வதின் மூலம் நான்காவது இடத்துக்கு முன்னேறலாம் என்ற நிலையில் மும்பை சிட்டி எஃப்சி அணியும், மும்பையை வெல்வதின் மூலம் ஐஎஸ்எல் வரலாற்றிலேயே மோசமான அணி என்னும் அவப்பெயரை தடுக்கலாம் என்னும் நிலையில் ஹைதராபாத் அணியும் மோதியதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

டாஸ் வென்ற மும்பை சிட்டி எஃப்சி அணி, வல‌து புறமிருந்து முதல் பாதி ஆட்டத்தைத் தொடங்கியது. ஆரம்பம் முதலே கோல்களை அடிக்கவும் தடுக்கவும் இரண்டு அணிகள் இடையே கடும் பலப்பரீட்சை நிலவியது. 34வது நிமிடத்தில் மும்பை சிட்டியின் சவுரவுக்கும், 42வது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் நிகிலுக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ஆட்டம் முதல் பாதியின் இறுதியை எட்டிக்கொண்டிருந்த வேளையிலும் கோல் விழாத நிலையில், 43வது நிமிடத்தில் மும்பை அணியின் முகமது லார்பி ஒரு கோல் அடித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். அதைத் தொடர்ந்து ஒரு நிமிடம் கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. பின்னர் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் மும்பை சிட்டி எஃப்சி அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்குவதற்கு முன் ஹைதரபாத் அணியில் மாற்றம் செய்யப்பட்டது. கோல் கணக்கில் முன்னேற்றம் எதுவும் ஏற்படாத நிலையில், 64வது நிமிடத்தில் ஹைதராபாத் அணியில் மீண்டும் ஒருமுறை மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 71வது நிமிடத்தில் மும்பை சிட்டி அணியில் முதல் முறையாக‌ மாற்றம் செய்யப்பட்டது. 73வது நிமிடத்தில் மும்பை அணியின் அங்கோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019-20 : Hyderabad FC vs Mumbai City FC match 66 report

நிமிடங்கள் கூடினாலும் கோல்களின் எண்ணிகை அதிகரிக்காத நிலையில், 78வது நிமிடத்தில் மும்பை எஃப்சி அணியின் பிரதிக் சௌத்ரிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 79வது நிமிடத்தில் மும்பை எஃப்சி அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது.

'கோல் அடிப்பீங்களா மாட்டீங்களா பா' என்னும் நிலைக்கு ரசிகர்கள் தள்ளப்பட்டிருந்த வேளையில், மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல் 84வது நிமிடத்தில் ஹைதரபாத் அணியிலும், 85வது நிமிடத்தில் மும்பை எஃப்சி அணியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.

பின்னர் 90வது நிமிடத்தில் கூடுதலாக நான்கு நிமிடங்கள் வழங்கப்பட்டன. கடைசியில் ஹைதராபாத்தின் மார்கோ பெனால்டி மூலம் ஒரு கோல் அடித்தார். இதைத் தொடர்ந்து ஆட்ட‌ம் 1 - 1 என்ற கோல் கணக்கில் முடிவுக்கு வந்தது.

Photos Courtesy : ISL Media

Story first published: Saturday, January 25, 2020, 12:16 [IST]
Other articles published on Jan 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+