For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முக்கிய வீரர்கள் காயம்.. முதல் வெற்றியை பெற ஹைதராபாத் அணி போராட்டம்.. நார்த் ஈஸ்ட்-ஐ வீழ்த்துமா?

ஹைதராபாத் : ஹைதராபாத் ஜி.எம்.சி பாலயோகி அதெலட்டிக் மைதானத்தில் நடைபெறும் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியை எதிர்கொள்ளும் போது தோல்வி அடைந்தால் ஹைதராபாத் எஃப்சி அணி வெளியேறும் நிலைக்கு தள்ளப்படும்.

இதற்கு முந்தைய ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணியை எதிர்த்து 2-1 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் எஃப்சி அணி ஒரு மோசமான தொடக்கத்தை கொடுத்தது.

ISL 2019-20 : Hyderabad FC vs North East United FC match 16 preview

பயிற்சியாளர் பில் பிரவுனின் தரப்பிலிருந்து தோல்விக்கான காரணங்களை கண்டுபிடிப்பதற்கு முன்பு தங்கள் சொந்த மண்ணிலேயே அந்த அணி இரண்டு கடுமையான தோல்விகளை சந்தித்தது.

ISL 2019-20 : Hyderabad FC vs North East United FC match 16 preview

அதே நேரத்தில் பயிற்சியாளர் பிரவுன் அணியில் செய்திருக்கும் மாற்றம் வீரர்களின் மன உறுதியை அதிகரிக்கச் செய்யும். ஆனாலும், காயம் மற்றும் இடைநீக்கங்கள் காரணமாக முக்கிய வீரர்கள் அணியில் இல்லை. இதை ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள முடியாது. போபோ, ரஃபேல் கோம்ஸ், கில்ஸ் பார்ன்ஸ் போன்ற முக்கிய நட்சத்திர வீரர்கள் அனைவரும் காயமடைந்துள்ளனர். மேலும், நெஸ்டர் கோர்டிலோவுக்கு இன்னும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

"நாங்கள் எல்லா காயங்களையும் கடந்துவிட்டோம் என்று நினைக்கவில்லை, இன்னும் நான்கு முக்கிய வீரர்கள் காயமடைந்துள்ளனர். அதனால், தற்போது நம்மிடம் இருக்கும் வீரர்கள் மீது கவனம் செலுத்துவதே மிகவும் நல்லது. எனவே, எங்களிடம் உள்ள வீரர்கள் மீதே நாங்கள் கவனம் செலுத்த உள்ளோம்" என்கிறார் பிரவுன்.

ISL 2019-20 : Hyderabad FC vs North East United FC match 16 preview

ஹைதராபாத் எஃப்சி அணியின் மிக முக்கிய வீரராக மார்சலின்ஹோ இருப்பார். கேரளா பிளாஸ்டர்ஸுக்கு எதிராக ஒரு அற்புதமான ஃப்ரீ-கிக் அடித்து, ஜாம்ஷெட்பூர் எஃப்சியிடம் 3-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தார். பலம் வாய்ந்த நார்த் ஈஸ்ட் யுனைடெட்டுக்கு எதிராக ஹைதராபாத் அணிக்கு தூணாக இருப்பார்.

ISL 2019-20 : Hyderabad FC vs North East United FC match 16 preview

அசைக்க முடியாத அசாமோ கியான் மற்றும் மார்ட்டின் சாவேஸ் தலைமையிலான நார்த் அணி ஒரு சக்தி வாய்த் தாக்குலை நடத்தும். இந்த சீசனில் பலவீனமான ஹைதராபாத் அணிக்கு நார்த் ஈஸ்ட் அணி ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். மேலும் நார்த் ஈஸ்ட் அணியின் தாக்குதல் மற்றும் தந்திரம் ரிடீம் ட்லாங்கிடம் உள்ளதால் அவர்கள் வெற்றியை நோக்கி பயணிக்கலாம்.

ISL 2019-20 : Hyderabad FC vs North East United FC match 16 preview

"நாங்கள் மிகவும் வலுவான அணிக்கு எதிராக விளையாட போகிறோம் என்பது எங்களுக்குத் தெரியும், நார்த் ஈஸ்ட் அணியில் உள்ள வீரர்கள் மிகவும் ஒழுக்கத்துடன் உள்ளனர். அவர்கள் மிகவும் தற்காப்புடன் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளனர். சொந்தமாக ஒரு ஆட்டத்தை வெல்லும் திறன் கொண்ட கியான் அவர்களிடம் இருக்கிறார். ஆனால் எங்களிடம் உள்ள குழு எத்தன்மையைக் கொண்டுள்ளது என்பது இன்னும் தெரியவில்லை" என்றார் பிரவுன்.

ISL 2019-20 : Hyderabad FC vs North East United FC match 16 preview

நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி இதுவரை மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. அவர்களுக்கு ஒரே ஒரு வெற்றி மட்டுமே என்றாலும், பெங்களூரு எஃப்சி மற்றும் எஃப்சி கோவா அணிகளுக்கு எதிராக ஒரு வலுவான அணியாக நார்த் ஈஸ்ட் உருவெடுத்துள்ளது.

ISL 2019-20 : Hyderabad FC vs North East United FC match 16 preview

அவர்கள் (ஹைதராபாத்) எப்படி விளையாடப் போகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. அவர்கள் கடைசி ஆட்டத்தில் ஜெயித்தார்க்ள . அவர்கள் முழு நம்பிக்கையுடன் இருப்பதால், அவர்களுக்கு எதிராக விளையாட நாங்கள் தயாராக வேண்டும். நாங்கள் இது வரை தோல்வி அடையாமல் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். இந்த, லீக்கில் பெரிய அணிகளுக்கு எதிராக நாங்கள் விளையாடினோம். இது கடினமான ஒரு போட்டியாக இருக்கும்" என்றார் நார்த் ஈஸ்ட் அணியின் ஜார்னி.

இந்த போட்டி நார்த் ஈஸ்ட் அணிக்கு பிடித்தவை என்று கருதப்பட்டாலும், ஹைதராபாத் அணி அவர்களை ஒருவேளை வெல்லலாம். யார் ஜெயிப்பார்கள் என்பதை பார்ப்போம்.

Photos Courtesy : ISL Media

Story first published: Wednesday, November 6, 2019, 18:23 [IST]
Other articles published on Nov 6, 2019
English summary
ISL 2019-20 : Hyderabad FC vs North East United FC match 16 preview
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+