Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹைதராபாத்தை வீழ்த்தியது நார்த் ஈஸ்ட் யுனைட்டெட்.. ஒரு கோல் அடித்து அசத்தல் வெற்றி!

ஹைதராபாத் : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் இன்றைய கால்பந்து போட்டியில் ஹைதராபாத் எஃப்சி - நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது..

இதில் நார்த் ஈஸ்ட் அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ISL 2019-20 : Hyderabad FC vs North East United FC match no.16 report

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 16 ஆம் நாள் ஆட்டம் ஹைதராபாத்தில் உள்ள ஜிஎம்சி பாலயோகி அதெலட்டிக் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஹைதராபாத் எஃப்சி - நார்த் ஈஸ்ட் எஃப்சி அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் எஃப்சி அணி வலது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.

ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்திலேயே நார்த் ஈஸ்ட் அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை ஹைதராபாத் அணியினர் லாவகமாக தடுத்து நிறுத்தினர்.

ஆட்டத்தின் 13 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் குர்தேஜுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து இரு அணிகளும் கடுமையாக மோதின. ஆனால் கடைசிவரை கோல் எதுவும் போடவில்லை.

ISL 2019-20 : Hyderabad FC vs North East United FC match no.16 report

பின்னர் கூடுதலாக 2 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆட்டத்தின் இடைவேளை வரை ஹைதராபாத் எஃப்சி - நார்த் ஈஸ்ட் எஃப்சி அணிகள் 0 - 0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.

இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. 51 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து 69 ஆவது நிமிடத்தில் ஹைதாராபாத் அணியிலும் மாற்றம் செய்யப்பட்டது. 76 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் ஹால்டருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019-20 : Hyderabad FC vs North East United FC match no.16 report

இதே போல் 85 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் சங்கருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. மேலும் 85 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் வாஸ்க்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

86 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணிக்கு ஒரு பெனால்ட்டி வாய்ப்பு கிடைத்தது. அப்போது அந்த அணியின் மேக்ஸி பாரியோ அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

ISL 2019-20 : Hyderabad FC vs North East United FC match no.16 report

இதைத் தொடர்ந்து கூடுதலாக 4 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. அப்போது நார்த் ஈஸ்ட் அணின் மிலன் மற்றும் ராய்க்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதே போல் ஹைதராபாத் அணியின் கமலுக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது நார்த் ஈஸ்ட் அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Photos Courtesy : ISL Media

Story first published: Thursday, November 7, 2019, 14:43 [IST]
Other articles published on Nov 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+