For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதல் நிமிடத்தில் கோல் அடித்தும்.. போட்டியில் தோல்வி அடைந்த ஹைதராபாத்.. ஒடிசா கலக்கல் வெற்றி!

ஹைதராபாத் : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் ஹைதராபாத் எஃப்சி அணி - ஒடிசா எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் ஒடிசா அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது..

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 59 ஆம் நாள் ஆட்டம் ஹைதராபாத்தில் ஜிஎம்சி பாலயோகி அதெலட்டிக் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஒடிசா எஃப்சி அணி இடது புறமிருந்து முதல் பாதி ஆட்டத்தைத் தொடங்கியது.

ISL 2019-20 : Hyderabad FC vs Odisha FC match 59 report

ஆட்டத்தின் முதலாவது நிமிடத்திலேயே ஹைதராபாத் அணியின் மார்சிலோனா அற்புதமாக ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 15 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் அரிடேன் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

பின்னர் ஹைதராபாத் அணியின் டிம்பிள் பகத்துக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 22 மற்றும் 44 ஆவது நிமிடங்களில் இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. பின்னர் 45 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத்தின் அணியின் டிம்பிளுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019-20 : Hyderabad FC vs Odisha FC match 59 report

பின்னர் ஆட்டத்தின் 45 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் அரிடேன் மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் ஒடிசா அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. ஆட்டத்தின் 57 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டன. 75 மற்றும் 84 ஆவது நிமிடங்களில் ஹைதராபாத் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன.

ISL 2019-20 : Hyderabad FC vs Odisha FC match 59 report

இதையடுத்து கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. ஆட்டத்தின் 90 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் டொரன்சோராவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இதில் ஒடிசா எஃப்சி அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முதல் நிமிடத்தில் கோல் அடித்தாலும், ஹைதராபாத் அணியால் இந்தப் போட்டியில் வெற்றி பெற முடியவில்லை.

ISL 2019-20 : Hyderabad FC vs Odisha FC match 59 report
Story first published: Thursday, January 16, 2020, 10:40 [IST]
Other articles published on Jan 16, 2020
English summary
ISL 2019-20 : Hyderabad FC vs Odisha FC match 59 report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+