For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜாம்ஷெட்பூர் எஃப்சி - பெங்களூரு எஃப்சி அணிகள் கடும் மோதல்!! டிராவில் முடிந்த ஆட்டம்!!

ம்ஷெட்பூர் : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் இன்றைய கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி - பெங்களூரு எஃப்சி அணிகளிடையே மோதல் நடைபெற்றது. இதில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் 0 - 0 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவில் முடிந்தது.

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 15 ஆம் நாள் ஆட்டம் ஜாம்ஷெட்பூரில் உள்ள ஜேஆர்டி டாடா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி - பெங்களூரு எஃப்சி அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு எஃப்சி அணி ஆட்டத்தைத் தொடங்கியது.

ISL 2019-20 : Jamshedpur FC vs Bengaluru FC match 15 report

ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இரு அணிகளும் கடுமையாக மோதின. ஆட்டத்தின் 14 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணிக்கு கோல் அடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது நழுவிப் போனது.

ISL 2019-20 : Jamshedpur FC vs Bengaluru FC match 15 report

26 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் சரன் வெளியேற்றப்பட்டு ஆஷிக் களம் இறக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 41 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் திரிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து கூடுதலாக 2 நிமிடங்கள் வழங்கப்பட்டன.

இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதி முடிவடைந்தது. இதில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி - பெங்களூரு எஃப்சி அணிகள் 0 - 0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.

இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. 46 அவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியின் அன்கிட் வெளியேற்றப்பட்டு ஐசக் களம் இறக்கப்பட்டார்.

ISL 2019-20 : Jamshedpur FC vs Bengaluru FC match 15 report

54 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிக்கு கோல் அடிக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது கைநழுவிப் போனது. இதே போல் 72 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதுவும் கைநழுவிப்போனது.

77 மற்றும் 80 ஆவது நிமிடங்களில் இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதே போல் 77 மற்றும் 88 ஆவது நிமிடங்களில் மீண்டும் இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.

ISL 2019-20 : Jamshedpur FC vs Bengaluru FC match 15 report

இதையடுத்து கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. இறுதி வரை இரு அணிகளுமே கோல் எதுவும் போடவில்லை. இதையடுத்து ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி - பெங்களூரு எஃப்சி அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டம் 0 - 0 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

Story first published: Monday, November 4, 2019, 18:07 [IST]
Other articles published on Nov 4, 2019
English summary
ISL 2019-20 : Jamshedpur FC vs Bengaluru FC match 15 report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+