Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019-20 : ஜாம்ஷெட்பூர் அணியை புரட்டி எடுத்த கோவா.. 5 கோல் அடித்து அபார வெற்றி!

ஜாம்ஷெட்பூர் : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி மற்றும் எஃப்சி கோவா அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் எஃப்சி கோவா அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஆறாவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 85வது நாள் ஆட்டம் ஜாம்ஷெட்பூரில் உள்ள ஜேஆர்டி டாடா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸில் நடைபெற்றது. இந்த சீசனில் இதுவரை 17 மேட்சுகள் ஆடி 36 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருந்த‌ எஃப்சி கோவா அணி, 17 ஆட்டங்களில் 18 புள்ளிகள் பெற்று எட்டாவது இடத்தில் இருந்த‌ ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியை நேருக்கு நேர் சந்தித்த‌து.

ISL 2019-20 : Jamshedpur FC vs FC Goa match report

மும்பை சிட்டி எஃப்சிக்கு எதிரான தன்னுடைய கடந்த ஆட்டம் வரை இரண்டாம் இடத்தில் இருந்த எஃப்சி கோவா, சென்ற வாரம் புதனன்று சொந்த மண்ணில் நடைபெற்ற ஆட்டத்தில் அந்த அணியை 5- 2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து முதலிடத்துக்கு முன்னேறியது.

எனவே, கடும் உழைப்புக்கு பிறகு கைப்பற்றிய முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ள எந்த வாய்ப்பையும் நழுவ விடக்கூடாது என்ற முடிவில் இருந்தது. அதோடு, இதில் அந்த அணி வென்றால் ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக்கில் இடம் பிடிக்கும் முதல் இந்திய அணி என்ற பெருமையையும் பெறலாம் என்ற காரணத்தால் தன் மொத்த வித்தையையும் இறக்க சித்தமாக இருந்தது.

கடந்த இரண்டு ஆட்டங்களை டிராவில் முடித்த‌ ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி, எட்டாவது இடத்திலிருந்து இன்னும் பின்னோக்கி சென்று விடாமல், முன்னோக்கி செல்ல வேண்டும் என்னும் முனைப்போடு இருந்தது. இந்த ஆட்டம் தன்னை நிரூபிக்க ஒரு சிறந்த தருணம் என்பதை ஜாம்ஷெட்பூர் எஃப்சி உணர்ந்தே இருந்தது. இருந்தும் அதன் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.

ISL 2019-20 : Jamshedpur FC vs FC Goa match report

டாஸ் வென்ற கோவா எஃப்சி அணி வலது புறமிருந்து தனது ஆட்டத்தை தொடங்கியது. 11வது நிமிடத்தில் அந்த அணியின் கொரோ, ஒரு கோல் அடித்து தனது அணியின் கணக்கை தொடங்கினார். 40வது நிமிடத்தில் கோவா எஃப்சி அணியின் அமேய்க்கு மஞ்சள் அட்டை காண்பிக்க‌ப்பட்டது. 45 நிமிடத்தில் 2 கூடுதல் நிமிடங்கள் அளிக்கப்பட்டன. இதை தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் எஃப்சி கோவா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கி நடைபெற்ற நிலையில், எஃப்சி கோவா தனது அணியில் 61வது நிமிடத்தில் ஒரு மாற்றத்தை செய்தது.

ISL 2019-20 : Jamshedpur FC vs FC Goa match report

ஜாம்ஷெட்பூர் எஃப்சி தனது அணியில் 65வது நிமிடத்தில் ஒரு மாற்றத்தை செய்தது. ரசிகர்களின் பலத்த ஆரவாரத்துக்கிடையே எஃப்சி அணியின் பவுமஸ், 70வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். 73வது நிமிடத்தில் எஃப்சி கோவா அணி ஒரு மாற்றத்தை செய்தது.

77வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி தனது அணியில் ஒரு மாற்றத்தை செய்தது. எஃப்சி கோவா அணியின் ஜாக்கி, 84வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். 86வது நிமிடத்தில் எஃப்சி கோவா அணி ஒரு மாற்றத்தை செய்த நிலையில், 87 வது நிமிடத்தில் அந்த அணியின் ஃபாலும், 90வது நிமிடத்தில் அதே அணியின் பவுமசும் தலா ஒரு கோல் அடித்தனர்.

ISL 2019-20 : Jamshedpur FC vs FC Goa match report

பின்னர் ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில் எஃப்சி கோவா அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Photos Courtesy : ISL Media

Story first published: Thursday, February 20, 2020, 11:11 [IST]
Other articles published on Feb 20, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+