For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ISL 2019 - 20 : ஜாம்ஷெட்பூர் அபார வெற்றி.. 3 கோல் அடித்து அசத்தல்.. ஹைதராபாத் அணியை வீழ்த்தியது!

ஜாம்ஷெட்பூர் : ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி சூப்பர் வெற்றியை பதிவு செய்தது.

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 10 ஆம் நாள் ஆட்டம் ஜாம்ஷெட்பூரில் உள்ள ஜெஆர்டி டாடா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

ISL 2019-20 : Jamshedpur FC vs Hyderabad FC match no. 10 report

இதில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி மற்றும் ஹைதராபாத் எஃப்சி அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி ஆட்டத்தைத் தொடங்கியது.

இரு அணிகளும் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தன. ஆட்டத்தின் 12 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் மார்கோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019-20 : Jamshedpur FC vs Hyderabad FC match no. 10 report

இதையடுத்து ஆட்டத்தின் 34 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் ஃபாருக் சௌத்ரி அற்புதமாக ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 45 ஆவது நிமிடத்தில் கூடுதலாக 2 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அப்போது ஹைதராபாத் அணியின் மார்ஸிலோனா ஒரு கோல் அடித்து அசத்தினார்.

இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி மற்றும் ஹைதராபாத் அணிகள் தலா ஒரு கோல் அடித்து 1 - 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.

ISL 2019-20 : Jamshedpur FC vs Hyderabad FC match no. 10 report

இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. ஆட்டத்தின் 55 மற்றும் 58 ஆவது நிமிடங்களில் இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதையடுத்து ஆட்டத்தின் 62 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் அனிகெட் ஜாதவ் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

ISL 2019-20 : Jamshedpur FC vs Hyderabad FC match no. 10 report

இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 66 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதையடுத்து ஆட்டத்தின் 75 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் கேஸல் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

ISL 2019-20 : Jamshedpur FC vs Hyderabad FC match no. 10 report

இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 83 மற்றும் 89 ஆவது நிமிடங்களில் ஜாம்ஷெட்பூர் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

இதையடுத்து கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து இந்த ஆட்டத்தில் 3 - 1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணி ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Photos Courtesy : ISL Media

Story first published: Wednesday, October 30, 2019, 15:52 [IST]
Other articles published on Oct 30, 2019
English summary
ISL 2019-20 : Jamshedpur FC vs Hyderabad FC match no. 10 report. Jamshedpur defeats Hyderabad.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+