Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிளே-ஆஃப் சிக்கலில் ஜாம்ஷெட்பூர்.. வலுவாக இருக்கும் கேரளா பிளாஸ்டர்ஸ்.. பரபர மோதல்!

ஜாம்ஷெட்பூர் : ஜேஆர்டி டாடா விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்தியன் சூப்பர் லீக் போட்டியில் கேரள பிளாஸ்டர்ஸை அணியை வீழ்த்துவதை தவிர ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிக்கு வேறு வழியில்லை.

ஜாம்ஷெட்பூர் அணி இதுவரை ஆடிய 11 ஆட்டங்களில் கடைசி 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. கேரளா பிளாஸ்டர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிபெறாவிட்டால் முதல் நான்கு இடங்களை அடைவதற்கான இடைவெளியை ஈடுசெய்ய முடியாததாகிவிடும்.

ISL 2019-20 : Jamshedpur FC vs Kerala Blasters FC match 63 preview

ஜாம்ஷெட்பூர் 13 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் இருக்கும்போது, கேரளா பிளாஸ்டர்ஸ் அவர்களை விட ஒரு புள்ளி முன்னிலையில் உள்ளது.

முதன்மை வீரர்களுக்கு காயமடைவதற்கு முன்பு ஜாம்ஷெட்பூர் எஃப்சி இரண்டாவது இடத்தில் இருந்தது. காஸ்டலைத் தவிர வேறு எந்த ஜாம்ஷெட்பூர் வீரரும் ஒன்றுக்கு மேற்பட்ட கோல்களை அடிக்கவில்லை.

"எங்கள் ஆட்டங்களில் வெற்றிபெற எங்களால் முடிந்தவரை செய்கிறோம். உதாரணமாக, பெங்களூருவுக்கு எதிரான கடைசி போட்டியைப் பார்த்தால், எங்களிடம் அதிக பந்து இருந்தது. எங்களிடம் 14 கார்னர் கிக் இருந்தன. ஆனால் வாய்ப்புகளை இழந்தோம். நாங்கள் விளையாடும் முறையை மாற்ற வேண்டும்" என்றார் ஐரியான்டோ.

ISL 2019-20 : Jamshedpur FC vs Kerala Blasters FC match 63 preview

டேவிட் கிராண்டே தனது பங்களிப்பை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபாரூக் சவுத்ரி, இரியண்டோவும் உற்சாகத்தை அளிப்பார்கள் என நம்புகிறோம்.

கேரளா பிளாஸ்டர்ஸ் அணியில் பார்தலோமெவ் ஓக்பேச், ரபேல் மெஸ்ஸி மற்றும் ஈல்கோ ஸ்காட்டோரி சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

ISL 2019-20 : Jamshedpur FC vs Kerala Blasters FC match 63 preview

எங்களுக்கு மேலே உள்ள அணிகள் சில புள்ளிகளை இழக்கும் என்பதால் வாய்ப்புகள் இன்னும் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். முதல் நான்கு இடங்களில் நாங்கள் கவனம் செலுத்தவில்லை. விளையாட்டை விளையாட்டாக விளையாடுவேன் என ஸ்கட்டோரி கூறினார்.

காயமடைந்த வீரர்களில் பெரும்பாலோர் மீண்டும் உடற்தகுதிக்கு வந்துவிட்டதால் ஸ்காட்டோரி நம்பிக்கையுடன் இருக்கிறார்.

Story first published: Sunday, January 19, 2020, 19:32 [IST]
Other articles published on Jan 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+