For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை சிட்டி எஃப்சி அணி அபார வெற்றி.. ஜாம்ஷெட்பூர் அணியை ஆதிக்கம் செலுத்தி வீழ்த்தியது!

ஜாம்ஷெட்பூர் : ஐஎஸ்எல் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் இன்றைய கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி - மும்பை சிட்டி எஃப்சி அணிகளுக்கிடையே மோதல் நடைபெற்றது. இதில் மும்பை அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 41 ஆம் நாள் ஆட்டம் ஜாம்ஷெட்பூரில் ஜெஆர்டி டாடா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜாம்ஷெட்பூர் அணி இடது புறமிருந்து முதல் பாதி ஆட்டத்தைத் தொடங்கியது. தொடக்கம் முதலே இரு அணிகளுமே அருமையாக விளையாடின.

ISL 2019-20 : Jamshedpur FC vs Mumbai City FC match 41 report

ஆட்டத்தின் 15 ஆவது நிமிடத்தல் மும்பை அணியின் மச்சோடோ அற்புதமாக ஒரு கோல் அடித்தார். பின்னர் 37 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் திரி ஒரு கோல் அடித்து அசத்தினார். 45 ஆவது நிமிடத்தில் மும்பை அணியில் மாற்றம் செய்யப்பட்டது.

இதையடுத்து கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டன. பின்னர் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் இரு அணிகளுமே 1 - 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.

ISL 2019-20 : Jamshedpur FC vs Mumbai City FC match 41 report

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. 46 ஆவது நிமிடத்தில் மும்பை அணியில் மாற்றம் செய்யப்பட்டது. 48 மற்றும் 49 ஆவது நிமிடங்களில் மும்பை அணியின் ரிக் மற்றும் போர்ஜசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

56 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் ரெய்னர் அற்புதமாக ஒரு கோல் அடித்தார். 58 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் பிட்டிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. மேலும் அந்த அணியில் மாற்றம் செய்யப்பட்டது. 60 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் பாஸிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

72 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியில் மாற்றம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 78 ஆவது நிமிடத்தில் மும்பை அணியில் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 79 மற்றும் 86 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் நரேந்தர் மற்றும் மான்ரே ஆகியோருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து 88 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் டிகோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து கூடுதலாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்டன. ஆட்ட நேர முடிவில் மும்பை எஃப்சி அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Photos Courtesy : ISL Media

Story first published: Friday, December 20, 2019, 18:17 [IST]
Other articles published on Dec 20, 2019
English summary
ISL 2019-20 : Jamshedpur FC vs Mumbai City FC match 41 report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+