Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போராடிய ஜாம்ஷெட்பூர்.. இறுதி நிமிட பரபரப்பு.. நார்த் ஈஸ்ட் அணிக்கு எதிரான போட்டி டிரா!

ஜாம்ஷெட்பூர் : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இந்த போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டதையடுத்து ஆட்டம் டிராவில் முடிந்தது.

6ஆவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 30 ஆம் நாள் ஆட்டம் ஜாம்ஷெட்பூரில் உள்ள ஜேஆர்டி டாடா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் மைதானத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணிகள் இடையே நடைபெற்றது.

ISL 2019-20 : Jamshedpur FC vs North East United FC match 30 report

இதில் டாஸ் வென்ற ஜாம்ஷெட்பூர் அணி வலது புறம் இருந்து ஆட்டத்தைத் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதில் இருந்து இரு அணிகளும் கடுமையாக மோதின.

ஆட்டத்தின் 22 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் சாவேசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 28 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் கேஸ்டல் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

பின்னர் கூடுதலாக ஒரு நிமிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது ஜாம்ஷெட்பூர் அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ISL 2019-20 : Jamshedpur FC vs North East United FC match 30 report

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 2 ஆவது பாதி தொடங்கியது. ஆட்டத்தின் 60 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் வினீத் வெளியேற்றப்பட்டு பாஸி களமிறங்கினார். 67 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியில் மாற்றம் செய்யப்பட்டது.

74 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து 78 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியில் மாற்றம் செய்ய்ப்பட்டது. 87 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் ராபினுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ஆட்டத்தின் 90 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியினர் அற்புதமாக ஒரு கோல் அடித்தனர். இதைத் தொடர்ந்து கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டன. முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டதையடுத்து ஆட்டம் டிராவில் முடிந்தது.

Photos Courtesy : ISL Media

Story first published: Wednesday, December 4, 2019, 17:29 [IST]
Other articles published on Dec 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+