Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019-20 : ஒடிசா அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி அபார வெற்றி!!

புபனேஸ்வர் : இந்தியன் ஐஎஸ்எல் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

6ஆவது ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் ஜாம்ஷெட்பூரில் உள்ள ஜெஆர்டி டாட்டா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி மற்றும் ஒடிசா அணிகள் மோதின.

ISL 2019-20 : Jamshedpur FC vs Odisha FC match 3 results

இதில் டாஸ் வென்ற ஒடிசா அணி வலது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது. ஜாம்ஷெட்பூர் அணி தொடக்கத்தில் இருந்தே மிக சிறப்பாக விளையாடியது. அதே நேரத்தில் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

ISL 2019-20 : Jamshedpur FC vs Odisha FC match 3 results

ஆட்டத்தின் 17 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் ஃபாருக் அற்புதமாக ஒரு கோல் அடித்தார். இதையடுத்து ஆட்டத்தின் 28 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் மான் ராய்க்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதே போல் ஆட்டத்தின் 35 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் ஜெய்ருவுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 40 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் அர்தனே அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

ISL 2019-20 : Jamshedpur FC vs Odisha FC match 3 results

இதனைத் தொடர்ந்து முதல் பாதி ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் மற்றும் ஒடிசா அணிகள் தலா ஒரு கோல் அடித்து சமனில் இருந்தன.

ISL 2019-20 : Jamshedpur FC vs Odisha FC match 3 results

46 ஆவது நிமிடத்தில் ஆட்டத்தின் இரண்டாம் பகுதி தொடங்கியது. 51 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் அனிகெட்டுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

அடுத்து 59 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியில் மாற்றம் செய்யப்பட்டது. இதே போல் 60 ஆவது நிமிடத்திலும் ஜாம்ஷெட்பூர் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. அதே 60 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் பெரெராவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019-20 : Jamshedpur FC vs Odisha FC match 3 results

பின்னர் ஆட்டத்தின் 85 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் கேஸ்டல் அற்புதமாக கோல் அடித்தார். பின்னர் ஆட்டத்தின் 90 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் கேஸ்டல் வெளியேற்றப்பட்டு ராபின் களமிறக்கப்பட்டார். இறுதியில் ஜாம்ஷெட்பூர் அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை தோற்கடித்தது.

Story first published: Wednesday, October 23, 2019, 17:21 [IST]
Other articles published on Oct 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+