For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதல் போட்டியில் ஏடிகேவுடன் மோதல்.. சவாலை ஏற்ற கேரளா பிளாஸ்டர்ஸ் கோச்!

கொச்சி : ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் ஆறாவது சீசன் இன்று கொச்சி ஜவஹர்லால் நேரு சர்வதேச மைதானத்தில் தொடங்குகிறது.

இதில் இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணியும், இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற ஏடிகே அணியும் மோதுகின்றன.

ISL 2019-20 : Kerala Blasters FC vs ATK league match preview

ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இந்தப் போட்டியைக் காண ஆர்வத்துடன் உள்ளனர். இதையடுத்து கேரள பிளாஸ்டர்ஸின் புதிய பயிற்சியாளர் எல்கோ ஸ்கட்டோரி ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் பணி என்ன என்பதை அறிந்து வைத்துள்ளார்.

டச்சுக்காரரான இந்த பயிற்சியாளர், ஏற்கனவே கடந்த சீசனில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியுடன் வெற்றிகரமாக பணியாற்றிய பிறகு தற்போதைய சீசனில் கொச்சியை தளமாகக் கொண்ட கேரளா பிளாஸ்டர்ஸ் அணியுடன் இணைந்து தனது மேஜிக் பணிகளை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சீசனில் வலுவான அணியான ஏடிகேவை வென்றதன் மூலம் ஒரு தொடக்கத்தைக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ISL 2019-20 : Kerala Blasters FC vs ATK league match preview

தொடக்க ஆட்டத்தில் விளையாடுவது என்பது எப்போதுமே கடினம். அதில் மிகுந்த, எதிர்பார்ப்புகள் இருக்கும். அதுதான் விளையாட்டின் ஒரு பகுதி.அது தான் அந்த அணியை ஆட்டத்தில் நிலைக்கச் செய்யும். நாங்கள் ஏற்கனவே ஏடிகே அணியை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். அவர்கள் மிகவும் வலுவான அணி மட்டுமல்லாமல் லீக்கின் சிறந்த அணிகளில் ஒன்றாகும் என ஸ்கட்டோரி தெரிவித்தார்.

கேரளா பிளாஸ்டர்ஸ் அணி கடைசியாக 2016 ஆம் ஆண்டு பிளே-ஆஃப் சுற்று வரை முன்னேறினர். அண்மைக்காலமாக அந்த அணி கடைசி நான்கை எட்டுவதற்கான முயற்சியில் மட்டும் இறங்கினர்.

ISL 2019-20 : Kerala Blasters FC vs ATK league match preview

இது குறித்து ஸ்கட்டோரி அனைத்து உண்மைகளையும் அறிந்தவர், மேலும் அவர் இந்த அணிக்கான ஸ்திரத்தன்மையின் கொண்டு வர முடியும் என்று நம்புகிறார்.

இது குறித்து பேசிய ஸ்கட்டோரி ஏடிகே, நார்த் ஈஸ்ட் யுனைட்டட் மற்றும் கேரளா அணிகளில் அதிக அளவு பயிற்சியாளர்கள் உள்ளனர். எனவே, இது ஸ்திரத்தன்மையைப் பெறுவதாகும். இங்கே, நிர்வாகத்துடன் எனக்கு நல்ல உறவு இருக்கிறது. கடந்த ஆண்டை விட சிறந்த அனுபவம் எங்களிடம் உள்ளது என்று நினைக்கிறேன் என்றார்.

நார்த் ஈஸ்ட் அணி கடந்த சீசனில் வெற்றிகரமான நிலையில் இருந்தது. ஆனால் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி எனக்கு முழுவதும் புதியது. ஆனால் இந்த அணியை ஜெயிக்க வைக்கும் சவாலை ஏற்க நான் தயாராக இருக்கிறேன் என்கிறார் ஸ்கட்டோரி.

கேரளா பிளாஸ்டர்ஸ் அணி தற்போது தங்களது முழு வெளிநாட்டு வீரர்களையும் புதுப்பித்து, பார்தலோமெவ் ஓக்பேச், கியானி ஜுவிவர்லூன், மரியோ ஆர்க்யூஸ் போன்ற சில முக்கியமான வீரர்களை கொண்டு வந்துள்ளனர். சஹால் அப்துல் சமத் போன்ற ஒரு சில இளம் இந்திய நட்சத்திர வீரர்களும் கேரளா அணியில் உள்ளனர். ஆனால் சந்தேஷ் ஜிங்கன் இல்லாதது அவர்களுக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும் என்று ஸ்கட்டோரி ஒப்புக்கொள்கிறார்.

ISL 2019-20 : Kerala Blasters FC vs ATK league match preview

எங்கள் அணியிலும் ஒரு சிறந்த குழு உள்ளது, நாங்களும் நல்ல வெளிநாட்டு வீரர்களை களம் இறக்கியுள்ளோம்.. எங்களிடம் சரியான வீரர்கள் இல்லை என்றாலும் நாங்கள் 2-3 வாரங்களில் எங்கள் அணி முன்னேற்றத்தைக் காணும் என்கிறார் ஸ்கட்டோரி.

நான் இதற்கு முன்பு ராஜுவுடன் பணிபுரிந்திருக்கிறேன் எங்கள் இருவருக்கும் நல்ல அனுபவம் கிடைக்கும் வகையில் மற்றொரு மையம் தேவைப்பட்டது. இது தற்போது கிடைத்துள்ளது. அவருக்கு நல்ல உடற்தகுதி இல்லை என்றாலும், கேரளா பிளாஸ்டர்ஸ் அணி சிறப்பாக உள்ளது என்கிறார் ஸ்கட்டோரி.

Photos Courtesy : ISL Media

Story first published: Sunday, October 20, 2019, 10:58 [IST]
Other articles published on Oct 20, 2019
English summary
ISL 2019-20 : Kerala Blasters FC vs ATK league match preview. Will Kerala Blasters bring surprise with the new coach?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+