For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடைசி நேரத்தில் கோல் போட்ட கோவா.. கேரளாவுக்கு எதிராக போராடி டிரா செய்தது!

கொச்சி : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் இன்றைய கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி - எஃப்சி கோவா அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் போட்டதையடுத்து ஆட்டம் டிராவில் முடிந்தது.

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 29 ஆம் நாள் ஆட்டம் கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி - எஃப்சி கோவா அணிகள் இடையே நடைபெற்றது.

ISL 2019-20 : Kerala Blasters FC vs FC Goa match 29 report

இதில் டாஸ் வென்ற கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வலது புறம் இருந்து ஆட்டத்தைத் தொடங்கியது. ஆட்டத்தின் 2 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் சிடோ அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

40 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் டிரோபாரோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆட்டத்தின் 41 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் ஃபால் கோல் அடித்து அசத்தினார்.

45 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் பிராண்டனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டதால் 1 - 1 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்தது.

ISL 2019-20 : Kerala Blasters FC vs FC Goa match 29 report

இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. ஆட்டத்தின் 52 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் ஃபாலுக்கு ரெட் கார்டு காண்பிக்கப்பட்டது.

59 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் மெஸ்ஸி அற்புதமாக ஒரு கோல் அடித்தார். 62 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் எடு பேடியாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

64 மற்றும் 66 நிமிடத்தில் கோவா மற்றும் கேரளா அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. 69 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் சிடோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 74 ஆவது நிமிடத்தில் கேரளா அணியில் மாற்றம் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து 83 மற்றும் 84 ஆவது நிமிடங்களில் கோவா அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டன. இதே போல் 86 ஆவது நிமிடத்தில் கேரளா அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது.

ISL 2019-20 : Kerala Blasters FC vs FC Goa match 29 report

இதையடுத்து கூடுதலாக 8 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அப்போது கோவா அணியின் ரோட்ரிடிக்ஸ் ஒரு கோல் அடித்து அசத்தினார். இதையடுத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து கேரளா - கோவா அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டம் 2 - 2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

Photos Courtesy : ISL Media

Story first published: Monday, December 2, 2019, 11:52 [IST]
Other articles published on Dec 2, 2019
English summary
ISL 2019-20 : Kerala Blasters FC vs FC Goa match 29 report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+