For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பலமான ஜாம்ஷெட்பூர் அணியை சந்திக்கும் கேரளா பிளாஸ்டர்ஸ்.. ஐஎஸ்எல் தொடரில் சுவாரஸ்ய மோதல்!

கொச்சி : இந்தியன் சூப்பர் லீக் சீசனின் இரண்டாவது வெற்றிக்குப் பின்னர் கேரளா பிளாஸ்டர்ஸ் கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சியை எதிர்கொள்கிறது.

கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வீரர்கள் ஏடிகே அணிக்கு எதிரான தொடக்க போட்டியின் வெற்றியின் பின்னர் ஆறு ஆட்டங்களில் வெற்றி பெறவில்லை. இந்த ஆறு போட்டிகளில் மூன்று டிராக்கள் மற்றும் பல தோல்விகளுடன், பிளாஸ்டர்ஸ் அணி தற்போது அட்டவணையின் எட்டாவது இடத்தில் உள்ளது.

ஆனாலும், நான்காவது இடத்தில் உள்ள ஜாம்ஷெட்பூர் எஃப்சிக்கு எதிராக அவர்கள் எளிதான அணியாக இருக்க மாட்டார்கள், அவர்கள் கொச்சியில் வெற்றி பெற்று அட்டவணையில் உயர முடியும்.

ISL 2019-20 : Kerala Blasters FC vs Jamshedpur FC match 37 preview

அதே நேரத்தில் ஐஎஸ்எல் கிராஃப் சற்று சுவாரஸ்யமானது. இந்த போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் தொடர்ச்சியாக இரண்டு டிராக்களை (எஃப்.சி கோவா மற்றும் மும்பை சிட்டிக்கு எதிராக) பெற்றது. கேரள பயிற்சியாளர் எல்கோ ஸ்காட்டோரி மற்றும் ஜாம்ஷெட்பூர் மேலாளர் அன்டோனியோ இரியான்டோ ஆகியோர் தங்கள் அணி வெற்றியைப் பதிவு செய்யவே விரும்புவார்கள்.

கேரளா அணியைப் பொறுத்தவரை தங்களுக்குள் நிலவும் குழப்பங்களுக்கு அவர்களே தீர்வு காண வேண்டும். எஃப்.சி கோவா மற்றும் மும்பை சிட்டி ஆகிய இரு அணிகளுக்கு எதிராக வெற்றியைப் பெற முயன்றது. ஆனால் , தாமதமாக கோல் அடித்ததால் ஒரு கட்டத்திற்கு டிராவை மட்டுமே பெற முடிந்தது.

ஜாம்ஷெட்பூர் எஃப்சி அவர்களின் 9 கோல்களில் 4 கோல்களை இறுதி 15 நிமிட ஆட்டங்களில் அடித்தது. அது குறித்து பயிற்சியாளர் ஸ்கட்டோரிக்கு கவலை உள்ளது.

"அது (தாமதமான கோல்) அணியில் உள்ள தரத்துடன் தொடர்புடையது. எனது முந்தைய கிளப்களில் நடைபெறும் குழு கூட்டங்களில், நான் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், இரட்டை விழிப்புணர்வைக் கொண்டிருக்கும் ஒரு மனநிலை இருக்க வேண்டும்" என்று டச்சுக்காரர் கூறினார்.

ISL 2019-20 : Kerala Blasters FC vs Jamshedpur FC match 37 preview

"கடந்த வாரம் செட்-பீஸ்சின் போது எங்களுக்குள் சில வேறுபாடுகள் இருந்தன. அதற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டும், இந்த விஷயத்தில், எனது வீரர்களை நான் கொஞ்சம் புத்திசாலியாகவும், கொஞ்சம் அர்த்தமுள்ளவனாகவும், இருக்க வேண்டும் என்று சொல்கிறேன்" என ஸ்கட்டோரி கூறினார்.

ரபேல் மெஸ்ஸி பஃலி தாமதமாக விளையாடினாலும் , பார்தலோமெவ் ஓக்பேச் இல்லாதது அவர்கள் அணியைப் பலவீனப்படுத்தும், மென் இன் யெல்லோ வெறும் ஆறு கோல்களை மட்டுமே அடித்திருக்கிறார், இது லீக்கில் இரண்டாவது மிகக் குறைவானதாகும்.

மறுபுறம், ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி பல தந்திரங்களை ஆட்டத்தின் போது காட்டியுள்ளது. அவர்கள் பந்தை வைத்திருப்பதை விரும்புகிறார்கள், ஆனால் கவுண்டரில் சமமாக ஆபத்தானவர்கள். ஃபாரூக் சவுத்ரி, சி.கே. வினீத் மற்றும் அனிகேத் ஜாதவ் போன்றவர்கள் ஆட்டத்தில் சிறந்து விளங்குகிறார்கள்.

இருப்பினும், ஸ்டார் ஸ்ட்ரைக்கர் செர்ஜியோ காஸ்டல் மற்றும் மிட்பீல்டர் பிட்டி இல்லாதது அணியின் கேம் பிளானை பாதிக்கும். மேலும் இது கேரளா அணிக்கு சாதகமானதாக இருக்கும்.

"கேரளாவின் வெற்றி இல்லாத கோல்கள் அணியை எவ்வாறு பாதிக்கும் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் கேரளா ஒரு நல்ல அணி. காயங்கள் போன்ற காரணங்களால் சீசனின் முதல் பகுதியில் அவர்கள் அதிர்ஷ்டம் அடையவில்லை. அவர்கள் கால்பந்து விளையாட முயற்சி செய்கிறார்கள், அவர்களுக்கு நல்ல ஆர்வம் இருக்கிறது. இந்த வகையான குறுகிய தொடர்களில், அவர்களுக்கு அதிக நேரம் இல்லை" என்றார் இரியான்டோ.

ISL 2019-20 : Kerala Blasters FC vs Jamshedpur FC match 37 preview

"ஒருவேளை செர்ஜியோவும் பிட்டியும் அணிக்கு முக்கியமானவர்களாக இருந்திருக்கலாம். அவர்கள் அணியில் இருந்திருந்தால் அது வித்தியாசமாக இருக்கும்" என்று அவர் ஒப்புக்கொண்டார்.

இருவருக்கும் இடையிலான நான்கு மோதல்களில் கேரள பிளாஸ்டர்ஸ் ஒருபோதும் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தவில்லை. அவர்கள் கடைசியாக சொந்த மண்ணில் விளையாடிய 10 ஆட்டங்களில் இரண்டில் மட்டுமே வென்றுள்ளனர். அவர்கள் ஒரு வெற்றியுடன் தங்களை மேம்படுத்துவார்களா? அல்லது ஜாம்ஷெட்பூர் தங்கள் அணிவகுப்பைத் தொடருவார்களா?

Story first published: Friday, December 13, 2019, 12:05 [IST]
Other articles published on Dec 13, 2019
English summary
ISL 2019-20 : Kerala Blasters FC vs Jamshedpur FC match 37 preview
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+