For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மெஸ்ஸி 2 கோல் அடித்து அசத்தல் ஆட்டம்.. ஜாம்ஷெட்பூருக்கு எதிராக டிரா செய்த கேரளா பிளாஸ்டர்ஸ்!

கொச்சி : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் இன்றைய கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் கேரளா பிளாஸ்டர்ஸ் - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகளின் ஆட்டம் 2 - 2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 37 ஆம் நாள் ஆட்டம் கொச்சி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கேரளா அணி முதல் பாதி ஆட்டத்தைத் தொடங்கியது.

ISL 2019-20 : Kerala Blasters FC vs Jamshedpur FC match 37 preview

ஆட்டத்தின் 5 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் ஜாக்சனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது

பின்னர் 27 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் பாஸிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ஆட்டத்தின் 38 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் பிட்டி அற்புதமாக ஒரு கோல் அடித்தார். இதையடுத்து கூடுதலாக 2 நிமிடங்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ஆட்டத்தின் முதல் பாதியில் ஜாம்ஷெட்பூர் அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ISL 2019-20 : Kerala Blasters FC vs Jamshedpur FC match 37 preview

இதையடுத்து ஆட்டத்தின் 2 ஆவது பாதி தொடங்கியது. 54 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் மெஸ்ஸிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. மேலும் அந்த அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. 63 ஆவது நிமிடத்திலும் கேரளா அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 64 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டது. 71 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் வினித் ஒரு கோல் அடித்தார்.

ISL 2019-20 : Kerala Blasters FC vs Jamshedpur FC match 37 preview

பின்னர் ஆட்டத்தின் 75 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் மெஸ்ஸி ஒரு கோல் அடித்தார். 81 ஆவது நிமிடத்தில் கேரளா அணியில் மாற்றம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 87 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் மெஸ்ஸி மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

பின்னர் 90 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியில் மாற்றம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கூடுதலாக 3 நிமிடங்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து இதில் கேரளா பிளாஸ்டர்ஸ் - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டம் 2 - 2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது

Photos Courtesy : ISL Media

Story first published: Saturday, December 14, 2019, 15:22 [IST]
Other articles published on Dec 14, 2019
English summary
ISL 2019-20 : Kerala Blasters FC vs Jamshedpur FC match 37 Report. Messi scores 2 goals and help KB to draw the match.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+