Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019-20 : கடைசி நேரத்தில் அடித்த கோல்.. கேரளாவை வீழ்த்தி வெற்றிநடை போட்ட மும்பை சிட்டி!

கொச்சி: ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 5ஆம் நாள் ஆட்டம் கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் மும்பை சிட்டி அணியும் மோதின.

ISL 2019-20 : Kerala Blasters FC vs Mumbai City FC match 5 report

டாஸ் வென்ற மும்பை அணி இடது புறமிருந்து ஆட்டத்தை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் பிரமாதமாக விளையாடின. ஆட்டத்தின் 40 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் கிரிக்கிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019-20 : Kerala Blasters FC vs Mumbai City FC match 5 report

ஆட்டத்தின் 42 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் மச்சாடோ வெளியேற்றப்பட்டு சோகு களம் இறக்கப்பட்டார். தொடர்ந்து அதே அணியில் இருந்து சோகு வெளியேற்றப்பட்டு பிரதிக் களம் இறக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 45 ஆவது நிமிடத்தில் முஸ்தபாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை.

ISL 2019-20 : Kerala Blasters FC vs Mumbai City FC match 5 report

ஆட்டத்தின் முதல் பாதியில் கேரளா மற்றும் மும்பை அணிகள் 0 - 0 என்ற கோல் கணக்கில் சம நிலையில் இருந்தன.

46 ஆவது நிமிடத்தில் ஆட்டத்தின் இரண்டாவது பகுதி தொடங்கியது. 54 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் நர்சாரி வெளியேற்றப்பட்டு ராகுல் களம் இறக்கப்பட்டார். ஆட்டத்தின் 61 ஆவது நிமிடத்தில் மும்பை சிட்டி அணியின் சர்தக்கிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019-20 : Kerala Blasters FC vs Mumbai City FC match 5 report

பின்னர் ஆட்டத்தின் 64 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் ஜெய்ரோவுக்க மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 68 ஆவது நிமிடத்தில் கேரளா அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதே போல் 73 ஆவது நிமிடத்தில் மும்பை சிட்டி அணியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.

78 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் பிரசாந்த் வெளியேற்றப்பட்டு சாகல் களம் இறக்கப்பட்டார். ஆட்டத்தின் 82 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் செர்மிட்டி அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

ISL 2019-20 : Kerala Blasters FC vs Mumbai City FC match 5 report

இதையடுத்து கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டன. இந்த 5 நிமிடத்திலும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து இன்றைய ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் கேரளா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Photos Courtesy : ISL Media

Story first published: Friday, October 25, 2019, 11:34 [IST]
Other articles published on Oct 25, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+