For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ISL 2019-20 : விறுவிறுப்பாக நடந்த போட்டி.. போராடி டிரா செய்த கேரளா - நார்த் ஈஸ்ட் அணிகள்!

கொச்சி : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் நார்த் ஈஸ்ட் அணிகளின் ஆட்டம் 1 - 1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 48 ஆம் நாள் ஆட்டம் கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நார்த் ஈஸ்ட் அணி முதல் பாதி ஆட்டத்தை இடது புறமிருந்து தொடங்கியது.

ISL 2019-20 : Kerala Blasters FC vs North East United FC match 48 result and highlights

ஆட்டம் தொடங்கியதில் இருந்து இரு அணிகளும் விறுவிறுப்பாக விளையாடின. 34 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணிக்கு கோல் அடிக்க வாய்ப்யு கிடைத்தும் அதை அந்த அணி நழுவவிட்டது. 37 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் செய்ட்யாசனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

39 ஆவது நிமிடத்தில் கேரளா அணியில் மாற்றம் செய்யப்பட்டது. 41 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் ராய்க்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. பின்னர் 43 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் ஒபிச்சோ அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

இதையடுத்து கூடுதலாக இரண்டு நிமிடங்கள் வழங்கப்பட்டன. 45 ஆவது நிமிடத்தில் கேரள அணியின் ராஜுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. பின்னர் கேரளா அணியில் மாற்றம் செய்யப்பட்டது.

ISL 2019-20 : Kerala Blasters FC vs North East United FC match 48 result and highlights

இதைத் தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதையடுத்து ஆட்டத்தின் 2 ஆவது பாதி தொடங்கியது. ஆட்டத்தின் 50 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் கியான் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

54 ஆவது நிமிடத்தில் கியானுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.70 மற்றும் 72 ஆவது நிமிடத்தில் இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.

ISL 2019-20 : Kerala Blasters FC vs North East United FC match 48 result and highlights

75 மற்றும் 83 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. இரண்டாம் பாதியின் முடிவில் கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டன.

கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் நார்த் ஈஸ்ட் அணிகளின் ஆட்டம் 1 - 1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

Photos Courtesy : ISL Media

Story first published: Sunday, December 29, 2019, 15:48 [IST]
Other articles published on Dec 29, 2019
English summary
ISL 2019-20 : Kerala Blasters FC vs North East United FC match 48 result and highlights
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+