For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தோல்விகளால் தடுமாறும் கேரளா பிளாஸ்டர்ஸ்.. ஒடிசாவை வீழ்த்துமா? பரபர ஐஎஸ்எல் மோதல்!

கொச்சி : கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்வுள்ள இந்தியன் சூப்பர் லீக்கின் நான்காவது சுற்று போட்டியில் ஒடிசா எஃப்சிக்கு அணிக்கு எதிராக விளையாடும்போது கேரள பிளாஸ்டர்ஸ் எஃப்சி தங்கள் பாணியில் அவர்களை தோற்கடிக்க முயற்சி செய்யும்.

இந்த சீசனின் தொடக்க இரவில் தங்கள் பரம எதிரிகளான ஏடிகே அணிக்கு எதிராக மகத்தான வெற்றி பெற்ற பின்னர், கொச்சியை அடிப்படையாகக் கொண்ட கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, மும்பை சிட்டி மற்றும் ஹைதராபாத் எஃப்சிக்கு எதிராக தோல்விகளை சந்தித்துள்ளது. தற்போது தங்களது சொந்த மண்ணில் மீண்டும் வெற்றி பெறுவதை உறுதி செய்வதற்கான வலுவான திட்டத்தை கொண்டு வர பயிற்சியாளர் எல்கோ ஸ்கட்டோரி முயற்சி செய்து வருகிறார்.

ISL 2019-20 : Kerala Blasters FC vs Odisha FC match no.18 preview

கடந்த சீசன் தொடக்க ஆட்டத்தில் ஏடிகே அணியை வென்ற பிறகு கேரளா 14 ஆட்டங்களில் தோல்வி அடைந்தது. அந்த தோல்விகளை மனதில் கொண்டு ஸ்கட்டோரியின் குழுவால் மீண்டும் மீண்டும் தோல்வியை சந்திக்காமல் ஒரு வெற்றி தேவைப்படுகிறது.

இதற்கிடையில், ஒடிசா எஃப்சியின் தன்மை கேரள பிளாஸ்டர்ஸுக்கு முற்றிலும் மாறுபட்டது. இரண்டு தோல்விகளை அடைந்த பின்னர் ஒடிசா தங்களது முந்தைய போட்டியில் மும்பை சிட்டியை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி, அந்த ஆட்டத்தில் அதிகபட்சமாக புள்ளைகளை பெற்றது..

எக்கச்சக்க காயம் நிறைந்த கேரள பிளாஸ்டர் அணி வீரர்கள் சிறந்த முறையில் விளையாடுவதன் மூலம் அவர்கள் அந்த செயல்திறனை வளர்த்துக் கொள்வார்கள். முந்தைய சீசனில் சந்தேஷ் ஜிங்கன் நிராகரிக்கப்பட்டபோது, மரியோ ஆர்க்ஸ் மற்றும் கியானி ஜுவேர்லூன் போன்றவர்கள் பொருத்தமாக இல்லை.

"நாங்கள் எங்கள் கடைசி ஆட்டத்தை மனரீதியாக வென்றிருக்க வேண்டும். ஹைதராபாத் அணியில் மூன்று வெளிநாட்டினர் மட்டுமே இருந்தனர். எங்களுக்கு நல்ல வாய்ப்புகள் இருந்தன. எங்களிடம் 43 கிராஸ்கள் இருந்தன, ஆனால் எத்தனை (பயனுள்ளதாக இருந்தன) என்பது மற்றொரு கேள்வி. மிட்ஃபீல்டில், நாங்கள் ஒரு முக்கிய வீரரை இழக்கிறோம். கடந்த ஆட்டத்தில் நாங்கள் ஜுவர்லூன் என்ற டிஃபென்டரை இழந்தோம் என்றார் ஸ்கட்டோரி.

ஆனால் கேரளாவை கவலையடையச் செய்வது என்னவென்றால், ஸ்டார் ஸ்ட்ரைக்கர் பார்தலோமெவ் ஓக்பேச்சிற்கு பல கோல் அடிக்க வாய்ப்புகளை அவர்களால் உருவாக்க முடியவில்லை, சஹால் அப்துல் சமத் போன்றவர்கள் இன்னும் பயிற்சியாளர் ஸ்கட்டோரியின் பாணிக்கு ஏற்றவாறு வரவில்லை.

"சஹால் கடந்த ஆட்டத்திலும் தவறு செய்தார், ஆனால் அதனால் நாங்கள் தோற்றதில்லை. நான் அதை சஹாலுடன் விவாதித்தேன்" என்று அவர் தெரிவித்தார்.

"கடந்த சீசனில், நாங்கள் நிறைய வாய்ப்புகளை இழந்தோம். இந்த ஆண்டு, நாங்கள் மூன்று போட்டிகளில் விளையாடி ஆறு கோல்களை அடித்தோம் - இது மூன்று ஆட்டங்களுக்குப் பிறகு இரண்டாவது சிறந்ததாகும். இந்தியாவில் எங்களிடம் நிறைய இளம் திறமையான வீரர்கள் உள்ளனர். நாங்கள் ஒரு வலுவான மனநிலையுடன் இங்கு வருகிறோம், நாங்கள் மூன்று புள்ளிகளைப் பெற முடியும் என்று முழுமையாக நம்புகிறோம்" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் கோம்பாவ் .

ISL 2019-20 : Kerala Blasters FC vs Odisha FC match no.18 preview

ஒடிசாவின் டிஃபென்ஸ் போதுமானதாக இல்லை. மூன்று ஆட்டங்களில் ஆறு கோல்களை அடித்து இறுதி 10 நிமிடங்களில் அவர்கள் இலக்குகளை அடைய நினைக்கிறார்கள். இதுவரை அவர்கள் விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் அப்படித்தான் செய்திருக்கிறார்கள்.

இந்த பலவீனத்தை சரிசெய்யவும் கடந்த சீசனின் பலத்தை மீண்டும் பெறவும் பிளாஸ்டர்ஸால் முடியுமா? சர்வதேச கால்பந்து போட்டியில் விளையாடுவதற்கு முன்னர் ஒரு கிளப்பின் வெற்றி ஒரு முக்கியமான உளவியல் காரணியாக இருக்கும்.

Photos Courtesy : ISL Media

Story first published: Friday, November 8, 2019, 16:45 [IST]
Other articles published on Nov 8, 2019
English summary
ISL 2019-20 : Kerala Blasters FC vs Odisha FC match no.18 preview
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+