Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டபுள் கோல்.. மும்பை சிட்டியை தூக்கி அடித்த ஏடிகே.. சூப்பர் வெற்றி!

மும்பை : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் மும்பை சிட்டி எஃப்சி - ஏடிகே எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் ஏடிகே அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

6ஆவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 51 ஆம் நாள் ஆட்டம் மும்பையில் உள்ள அரினா அரங்கில் நடைபெற்றது.

ISL 2019-20 : Mumbai City FC vs ATK match 51 report

ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணிகளுமே கடுமையாக மோதின. ஆட்டத்தின் 29 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் பிரணாய் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

ஆட்டத்தின் 34 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டது. 36 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் செர்மிட்டிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

42 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் டியாகோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 45 ஆவது நிமிடத்தில் ஏடிகே சூசை அற்புதமாக ஒரு கோல் அடித்தார். அதே 45 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் மன்டி சோசாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் முதல் பாதி முடிவுற்றது. இதில் ஏடிகே அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்னர் ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. ஆட்டத்தின் 54 அவது நிமிடத்தில் மும்பை அணியின் பிரதிக்கிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 57 மற்றும் 63 ஆவது நிமிடங்களில் இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.

ISL 2019-20 : Mumbai City FC vs ATK match 51 report

70 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் அரிந்தத்திற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 75 மற்றும் 78 ஆவது நிமிடங்களில் இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. பின்னர் 84 ஆவது நிமிடத்தில் மும்பை அணியில் மாற்றம் செய்யப்பட்டது.

இதையடுத்து கூடுதலாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்டன. பின்னர் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து ஏடிகே அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Photos Courtesy : ISL Media

Story first published: Sunday, January 5, 2020, 18:50 [IST]
Other articles published on Jan 5, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+