Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019-20 : வீழ்ந்தது சாம்பியன் பெங்களூரு.. மும்பை சிட்டி அணி அதிரடி வெற்றி!

மும்பை : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் இன்றைய கால்பந்து தொடரில் மும்பை சிட்டி எஃப்சி அணி - பெங்களூரு எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் மும்பை சிட்டி அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 61 ஆம் நாள் ஆட்டம் மும்பையில் உள்ள அரினா கால்பந்து ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை சிட்டி எஃப்சி அணி இடது புறமிருந்து முதல் பாதி ஆட்டத்தைத் தொடங்கியது.

ISL 2019-20 : Mumbai City FC vs Bengaluru FC match 61 report

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் கடுமையாக மோதின. ஆட்டத்தின் 13 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் சோகு அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

42 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் டிமோசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து கூடுதலாக இரண்டு நிமிடங்கள் வழங்கப்பட்டன. பின்னர் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் மும்பை சிட்டி அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. 46 மற்றும் 54 ஆவது நிமிடங்களில் பெங்களூரு அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. 55 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் செர்மிட்டி ஒரு கோல் அடித்தார்.

65 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியில் மீண்டும் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. 79 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் சுனில் ஷேத்ரிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

85 மற்றும் 90 ஆவது நிமிடங்களில் மும்பை சிட்டி அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. அதே 90 ஆவது நிமிடத்தில் மும்பை அணியில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இதில் மும்பை சிட்டி அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Story first published: Saturday, January 18, 2020, 16:56 [IST]
Other articles published on Jan 18, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+