Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோல் மழை பொழிந்த கோவா.. மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றி!!

மும்பை : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி அணி - எஃப்சி கோவா அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. ஆட்டத்தின் முடிவில் கோவா அணி 4 - 2 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை விழ்த்தி வெற்றி பெற்றது.

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 17 ஆம் நாள் ஆட்டம் மும்பையில் உள்ள அரினா கால்பந்து அரங்கத்தில் நடைபெற்றது. இதில் மும்பை சிட்டி அணி - எஃப்சி கோவா அணிகள் அதிரடியாக மோதின. டாஸ் வென்ற கோவா அணி வலது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.

ISL 2019-20 : Mumbai City FC vs FC Goa match 17 report

ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணிகளும் கடுமையாக மோதின. ஆட்டமும் விறுவிறுப்பாக இருந்தது. ஆட்டத்தின் 27 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் ரோட்ரிக்ஸ் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

45 ஆவது நிமிடத்திற்குப் பிறகு கூடுதலாக இரண்டு நிமிடங்கள் வழங்கப்பட்டன. அப்போது கோவா அணியின் கோரோ ஒரு கோல் அடித்து அசத்தினார்.

இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் எஃப்சி கோவா அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. அப்போது 49 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் சர்தாக் அற்புதமாக ஒரு கோல் அடித்தார். பின்னர் 55 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் சக்ரபர்த்தி ஒரு கோல் அடித்து அசத்தினார்.

ISL 2019-20 : Mumbai City FC vs FC Goa match 17 report

இதையடுத்து ஆட்டம் பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் 59 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் பௌமஸ் அற்புதமாக ஒரு கோல் அடித்து அசத்தினார். 63 ஆவது நிமிடத்தில் கோவா அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

இதே போல் 68 ஆவது நிமிடத்தில் மும்பை அணியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. 70ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் சக்ரபர்த்திக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து 72 ஆவது நிமிடத்தில் மும்பை அணியிலும், 75 ஆவது கோவா அணியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. 80 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் ரெய்னர் வெளியேற்றப்பட்டு பித்யானந்தா களம் இறக்கப்பட்டார்.

ISL 2019-20 : Mumbai City FC vs FC Goa match 17 report

ஆட்டத்தின் 89 அவது நிமிடத்தில் கோவா அணியின் பிராண்டனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. அதே 89 அவது நிமிடத்தில் கோவா அணியின் பெனா அற்புதமாக ஒரு கோல் அடித்து அசத்தினார்.

இதையடுத்து கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அப்போது கோவா அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. இறுதியில் கோவா அணி 4 - 2 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Photos Courtesy : ISL Media

Story first published: Friday, November 8, 2019, 16:31 [IST]
Other articles published on Nov 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+