Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை அசத்தல் ஆட்டம்.. ஐஎஸ்எல் லீக் போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது!

மும்பை : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் 49வது போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி - ஹைதராபாத் எஃப்சி அணிகள் மோதின. இதில் மும்பை எஃப்சி அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 49 ஆம் நாள் ஆட்டம் மும்பையில் உள்ள அரினா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை சிட்டி அணி முதல் பாதி ஆட்டத்தை வலது புறமிருந்து தொடங்கியது.

ISL 2019-20 : Mumbai City FC vs Hyderabad FC match 49 report

ஆட்டத்தின் 6 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் சோகு அற்புதமாக ஒரு கோல் அடித்து அசத்தினார். 14 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணிக்கு கோல் அடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது நழுவிப் போனது.

ஆட்டத்தின் 25 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் சார்தக்கிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து கூடுதலாக 2 நிமிடங்கள் வழங்கப்பட்டன. பின்னர், முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. முடிவில் மும்பை எஃப்சி அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ISL 2019-20 : Mumbai City FC vs Hyderabad FC match 49 report

இதையடுத்து ஆட்டத்தின் 2 ஆவது பாதி தொடங்கியது. பின்னர் 51 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் பிரிதிக்கிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019-20 : Mumbai City FC vs Hyderabad FC match 49 report

70 ஆவது நிமிடத்தில் மும்பை அணியில் மாற்றம் செய்யப்பட்டது. 77 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் டிகோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து ஆட்டத்தின் 78 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் சோகு அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

இதைத் தொடர்ந்து ஹைதராபாத் அணியின் போபோ ஒரு கோல் அடித்து அசத்தினார். 84 ஆவது நிமிடத்தில் மும்பை அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டது. இதையடுத்து கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டன. பின்னர் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இதில் மும்பை அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Story first published: Wednesday, January 1, 2020, 12:45 [IST]
Other articles published on Jan 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+