Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019 - 20 : இரண்டாவது வெற்றிக்காக அலைமோதும் மும்பை சிட்டி - கேரளா பிளாஸ்டர்ஸ்!

மும்பை : மும்பை சிட்டி எஃப்சி மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிகள் மும்பை அரினா கால்பந்து அரங்கில் மோதும் போது இந்த சீசனின் இரண்டாவது வெற்றியைப் பெற கடுமையாக போராடுவார்கள்.

மும்பை அணி இப்போது ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெறாமல் சென்றுள்ளது, அவர்களது ஒரே வெற்றி கொச்சியில் கேரள பிளாஸ்டர்ஸுக்கு எதிராக இந்த சீசனின் முதல் போட்டியில் கிடைத்துள்ளது.. மும்பை அணி ஆறு புள்ளிகள் பெற்று அட்டவணையில், ஏழாவது இடத்தில் உள்ளது.

ISL 2019-20 : Mumbai City FC vs Kerala Blasters FC match 32 Preview

போர்த்துகீசிய பயிற்சியாளரான ஜார்ஜ் கோஸ்டா மும்பை அணிக்கு வெற்றிகளைப் பெற வேண்டிய அழுத்தத்தில் இருப்பதை ஒத்துக் கொண்டுள்ளார். அவர்களது எதிரிகளான கேரளா அணியும் இதேபோன்ற சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர்.

"வெற்றி பெற வேண்டும் என இரு அணிகளுக்கும் அழுத்தம் இருக்கும். எங்களுக்கு புள்ளிகள் தேவை என்பதால் நாங்கள் அழுத்தத்தின் கீழ் விளையாடுகிறோம். நாங்கள் விரும்பும் பகுதிக்கு (அட்டவணையில்) நெருக்கமாக இருக்க வேண்டும், அதற்கு நாங்கள் தகுதியானவர்கள் என்று நினைக்கிறேன். ஆம், நாங்கள் அழுத்தத்தில் விளையாடுகிறோம், இது கால்பந்தின் ஒரு பகுதியாகும்" என கோஸ்டா கூறினார்.

ISL 2019-20 : Mumbai City FC vs Kerala Blasters FC match 32 Preview

"ஒரு நபரின் தவறு காரணமாக நீங்கள் புள்ளிகளை இழக்கும்போது அது ஒரு பிரச்சினையாகும், ஆனால் கடைசி இரண்டு ஆட்டங்களிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல விஷயம் என்னவென்றால், நாங்கள் ஒரு அணியாக விளையாடுகிறோம் என்பது தான். எங்கள் விளையாட்டில் நல்ல தரம் இருக்கிறது" என்று அவர் மேலும் கூறினார்.

மற்ற அணியின் களத்தில் ஈல்கோ ஸ்காட்டோரியின் மோசமான ஆட்டம் எடுபடாமல் உள்ளது. கொச்சியில் தொண்ணூறு நிமிடங்களில் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்திய போதிலும், எஃப்.சி கோவாவுக்கு எதிராக டிரா மட்டுமே கிடைத்தது. கேரளா பிளாஸ்டர்ஸ் தொடக்க நாள் வெற்றியின் பின்னர் இந்த சீசனின் இரண்டாவது வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது.

ISL 2019-20 : Mumbai City FC vs Kerala Blasters FC match 32 Preview

கடந்த சில ஆண்டுகளாக கேரளா பிளாஸ்டர்ஸ் அணி தங்களது சொந்த மண்ணில் விளையாடுவதைவிட வேறு இடங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் மும்பையில் உள்ள ரசிகர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும் என்று ஸ்கட்டோரி நம்புகிறார்.

கோவாவுக்கு எதிரான அணிக்காக ரபேல் மெஸ்ஸி ஃபலி மற்றும் பார்தலோமெவ் ஒக்பெச் ஆகியோர் ஒன்றாக விளையாடினர், மேலும் மும்பை டிஃபென்சுக்கு எதிராக இருவருமே திறம்பட இணைவார்கள் என்று கோச் எதிர்பார்க்கிறார்.

"ஸ்கோர்போர்டு புள்ளி விபரங்களால் நான் சற்று எரிச்சலடைகிறேன். நாங்கள் ஆறு ஆட்டங்களில் விளையாடியுள்ளோம், ஒவ்வொரு முறையும் நான் ஒரு படி மேலே செல்ல வேண்டியிருக்கும் போது, நாங்கள் இரண்டு படிகள் பின்வாங்க வேண்டியிருந்தது." என்றார் ஸ்கட்டோரி.

கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் டிஃபென்ஸ் தரப்பில் கியானி ஜுவேர்லூன், மிட்ஃபீல்டில் மரியோ ஆர்க்ஸ் மற்றும் ம ஃஸ்தாபா ஜிங் ஆகியோரின் சேவைகள் இல்லாமல் தொடர்கிறது. தொடக்க வரிசையில் அவர்களுக்காக ஜீக்சன் சிங் உள்ளார். அவரது வயதைத் தாண்டி அவர் முதிர்ச்சியடைந்திருப்பதால் நியாயமான முறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

"தனிப்பட்ட வீரர்களிடம் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன். நாங்கள் பெங்களூருக்கு எதிராகவும், கடந்த வாரம் கோவாவுக்கு எதிராகவும் ஒரு ஆட்டத்தை நிகழ்த்தினோம். அந்த ஆட்டத்தில் வெற்றிபெறாததற்கு நாங்கள் நன்றி சொல்ல முடியும்" என்று டச்சுக்காரர் கூறினார்.

இந்த இரு அணிகளும் சீசனின் இரண்டாவது வெற்றியைப் பெற வேண்டும் என நினைப்பதால் இந்த போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Photos Courtesy : ISL Media

Story first published: Wednesday, December 4, 2019, 19:53 [IST]
Other articles published on Dec 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+