For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை சந்திக்கும் மும்பை சிட்டி.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு குறி!

மும்பை : ஐஎஸ்எல் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நாளை மும்பை ஃபுட்பால் அரினாவில் நடக்க இருக்கிற ஆட்டத்தில், நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணியை எதிர்த்து களம் காண்கிறது மும்பை சிட்டி எஃப்சி. வெள்ளியன்று மும்பை ஜெயித்தால் டாப் நான்கு அணிகளில் ஒன்றாக திகழ முடியும்.

தற்சமயம் புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ள மும்பை, நாளைய வெற்றியின் மூலம் ஒடிசா எஃப்சியை பின்னுக்குத் தள்ளி நான்காவது இடத்துக்கு முன்னேறலாம். தங்கள‌து கடந்த ஆட்டத்தை ஹைதராபாத் எஃப்சியுடன் டிராவில் முடித்த ஜார்ஜ் கோஸ்டா தலைமையிலான மும்பை அணியினர், நாளை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த மும்முரமாக உள்ளனர்.

ISL 2019-20 : Mumbai City FC vs North East United FC match 71 preview

மோடோச் சொவ்கவ் மும்பை அணிக்கு வலு சேர்ப்பார் என்னும் போதிலும், பிரதிக் சவுத்ரி சஸ்பென்ட் செய்யப்பட்டதால் ஏற்பட்டிருக்கும் இழப்பு அந்த அணியை பாதிக்குமா என்பது நாளை தெரியும். 19 வயதே ஆன ஹமிங்தன் மாவியா, மாடோ கிரிஜிக்குடன் இணைந்து மும்பை அணியை சொந்த மண்ணில் வெற்றியை நோக்கி அழைத்து செல்வார் என எதிர்பார்க்கலாம்.

ரவுலின் போர்கஸும், சௌரவ் தாசும் கூட கடந்த இரு ஆட்டங்களில் தங்களது திறமையை வெளிப்படுத்தி இருந்தனர். கடந்த காலத்தில் ஹைதரபாத் எஃப்சி உடனான ஆட்டத்தில் சவால்களை சந்தித்த பிறகு, கோஸ்டா ஆடும் முறைகளில் சில மாற்றங்களை செய்திருப்பார் என்றே நம்பலாம்.

ISL 2019-20 : Mumbai City FC vs North East United FC match 71 preview

"எங்களது வீரர்கள் தங்களது சிறப்பான பங்களிப்பை நாளை தருவார்கள் என நான் முழுமையாக நம்புகிறேன். இறுதியில் என்ன நடக்கும் என தெரியாத போதிலும், வெற்றியை நோக்கி நாங்கள் பாடுபடுவோம். எங்கள் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்துவோம்," என்கிறார் கோஸ்டா.

நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிக்கும் சவால்கள் காத்திருக்கின்றன. இந்த சீசனில் மிகக் குறைவான கோல்களையே (9) இது வரை எடுத்துள்ளார்கள். அத்தோடு இல்லாமல், வெளியூர்களில் நடைபெற்ற ஆட்டங்களில் இது வரை மூன்று முறையே ஜெயித்துள்ளார்கள். கடந்த மூன்று ஆட்டங்களில் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இருந்தாலும் நம்பிக்கையுடனே உள்ளனர்.

ISL 2019-20 : Mumbai City FC vs North East United FC match 71 preview

ஃபெடெரிகோ கல்லேகோ இது வரை தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. புதிதாக அணியில் இடம் பிடித்துள்ள ஆன்டி கியோக்கும் சைமன் லுன்டேவாலும் எப்படி விளையாடுவார்கள் என தெரியவில்லை. ஆனால், ராபர்ட் ஜார்னியின் அணி நாளை சிறப்பாக விளையாடினால் மட்டுமே அதன் எதிர்காலம் நன்றாக இருக்கும்.

மிஸ்லாவ் கோமோர்ஸ்கி மாற்றும் கோல் கீப்பர் சுபாசிஷ் ராய் ஆகியோர் அணியில் இருப்பதால் நம்பிக்கை கீற்று சற்றே வெளிப்படுகிறது. இருந்த போதிலும், நார்த் ஈஸ்ட் அணி மும்பை அணியை ஜெயிக்குமா?

Story first published: Thursday, January 30, 2020, 19:50 [IST]
Other articles published on Jan 30, 2020
English summary
ISL 2019-20 : Mumbai City FC vs North East United FC match 71 preview
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+