For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ISL 2019-20 : நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியை வென்றது மும்பை சிட்டி எஃப்சி!

மும்பை : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி மற்றும் மும்பை சிட்டி எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் மும்பை அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஆறாவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 71வது நாள் ஆட்டம் மும்பை ஃபுட்பால் அரீனாவில் நடைபெற்றது.

ISL 2019-20 : Mumbai City FC vs North East United FC match 71 report

புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ள மும்பை, வெற்றியின் மூலம் ஒடிஷா எஃப்சியை பின்னுக்குத் தள்ளி நான்காவது இடத்துக்கு முன்னேறலாம். எனவே, தங்கள‌து கடந்த ஆட்டத்தை ஹைதராபாத் எஃப்சியுடன் டிராவில் முடித்த ஜார்ஜ் கோஸ்டா தலைமையிலான மும்பை அணியினர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த மும்முரமாக இருந்தனர்.

ISL 2019-20 : Mumbai City FC vs North East United FC match 71 report

நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியோ, இந்த சீசனில் மிகக் குறைவான கோல்களையே (9) இது வரை எடுத்து இருந்தனர். அதோடு இல்லாமல், வெளியூர்களில் நடைபெற்ற ஆட்டங்களில் இது வரை மூன்று முறையே ஜெயித்து இருந்தனர். கடந்த மூன்று ஆட்டங்களில் ஒரு கோல் கூட அடிக்கவில்லை என்றாலும், மும்பை சிட்டி எஃப்சியை நம்பிக்கையுடன் தான் எதிர்கொண்டனர்.

டாஸ் வென்ற நார்த் ஈஸ்ட் அணி இடது புறமிருந்து முதல் பாதி ஆட்டத்தைத் தொடங்கியது. ஏழாவது நிமிடத்தில் மும்பை அணியின் டிகோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 19வது நிமிடத்தில் அதே அணியின் ரபீக்குக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

முதல் பாதி ஆட்டம் கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் நேரத்தில் கூட எந்த அணியும் கோல் அடிக்காத நிலையில், 44வது நிமிடத்தில் மும்பை அணியின் டிகோ ரசிகர்களின் பலத்த ஆரவாரத்திற்கிடையே ஒரு கோல் அடித்தார். இதைத் தொடர்ந்து முதல் பாதி இரண்டு நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டது.

பின்னர் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் மும்பை சிட்டி எஃப்சி அணி நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை விட 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

ISL 2019-20 : Mumbai City FC vs North East United FC match 71 report

இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில் மும்பை சிட்டி அணியிலும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. 47வது நிமிடத்தில் மும்பை சிட்டி அணியில் மற்றுமொருமுறை மாற்றம் செய்யப்பட்டது.

ஒரு கோல் ஆவது அடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் இருந்த நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி, 69வது நிமிடத்தில் ஒரு மாற்றம் செய்தது. பத்து நிமிடங்கள் கழித்து மீண்டும் ஒருமுறை தனது அணியில் மாற்றத்தை செய்தது. 79வது நிமிடத்தில் மும்பை அணியின் சவுகவ்க்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019-20 : Mumbai City FC vs North East United FC match 71 report

ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் ஒரு முறையும் 90வது நிமிடத்தில் மற்றுமொருமுறையும் நார்த் ஈஸ்ட் அணியின் ரீகனுக்கு மஞ்சள் அட்டைகள் காண்பிக்கப்பட்டன. 90வது நிமிடத்தில் மும்பை சிட்டி அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் நிகிலுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில் மும்பை சிட்டி எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வெற்றி பெற்றது.

Photos Courtesy : ISL Media

Story first published: Saturday, February 1, 2020, 18:16 [IST]
Other articles published on Feb 1, 2020
English summary
ISL 2019-20 : Mumbai City FC vs North East United FC match 71 report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+