Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை சிட்டி அணியை பந்தாடிய ஒடிசா.. கோல் மழை பொழிந்து அபார வெற்றி!!

மும்பை: ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் இன்றைய கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி மற்றும் ஒடிசா அணிகளிடையே மோதல் நடைபெறுகிறது. இதில் ஒடிசா அணி 4 - 2 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 12 ஆம் நாள் ஆட்டம் மும்பையில் உள்ள மும்பை ஃபுட்பால் அரினா அரங்கில் நடைபெற்றது. இதில் மும்பை சிட்டி எஃப்சி மற்றும் ஒடிசா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஒடிசா அணி ஆட்டத்தைத் தொடங்கியது.

ISL 2019-20 : Mumbai City FC vs Odisha FC match 12 result

ஆட்டத்தின் 6 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் சிஸ்கோ அற்புதமாக ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 11 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் வினித்துக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்டத்தின் 21 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் அரிடேன் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

ISL 2019-20 : Mumbai City FC vs Odisha FC match 12 result

ஆட்டத்தின் 35 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் அம்ரீந்தருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஒடிசா அணியின் அரிடேனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019-20 : Mumbai City FC vs Odisha FC match 12 result

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 41 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் ஜெர்ரி ஒரு கோல் அடித்து அசத்தினார். இதையடுத்து கூடுதலாக 2 நிமிடங்கள் வழங்கப்பட்டன. பின்னர் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் முதல் பாதியில் ஒடிசா அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ISL 2019-20 : Mumbai City FC vs Odisha FC match 12 result

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. ஆட்டத்தின் 46 ஆவது நிமிடத்தில் மும்பை அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆட்டத்தின் 51 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் லார்பி ஒரு கோல் அடித்து அசத்தினார். 58 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் ரெய்னருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019-20 : Mumbai City FC vs Odisha FC match 12 result

அடுத்து 63 மற்றும் 69 ஆவது நிமிடங்களில் ஒடிசா அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதையடுத்து ஆட்டத்தின் 73 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் அரிடேன் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

ISL 2019-20 : Mumbai City FC vs Odisha FC match 12 result

76 மற்றும் 79 ஆவது நிமிடங்களில் இரு அணிகளிலுமே மாற்றங்கள் செய்யப்பட்டன. இதையடுத்து 84 ஆவது நிமிடத்தில் மும்பை சிட்டி அணியின் ரபீக் வெளியேற்றப்பட்டு விக்னேஷ் களமிறக்கப்பட்டார்.

ISL 2019-20 : Mumbai City FC vs Odisha FC match 12 result

இதனைத் தொடர்ந்து கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அப்போது மும்பை அணியின் பாபின் ஒரு கோல் அடித்து அசத்தினார். பின்னர் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து ஒடிசா அணி 4 - 2 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Photos Courtesy : ISL Media

Story first published: Saturday, November 2, 2019, 12:36 [IST]
Other articles published on Nov 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+