For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வலுவாக களமிறங்கும் மும்பை சிட்டி.. முதல் வெற்றிக்கு தவிக்கும் ஒடிசா.. ஐஎஸ்எல் தொடரில் பரபர மோதல்!

மும்பை : மும்பை ஃபுட்பால் அரினா அரங்கில் ஒடிசா எஃப்சிக்கு எதிராக மும்பை சிட்டி அணி தனது சொந்த மண்ணில் இந்த ஐஎஸ்எல் சீசனின் முதல் ஆட்டத்திற்கு தயாராகியுள்ளது.

மும்பை சிட்டி அணி இந்த சீசனில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி மற்றும் சென்னையின் எஃப்சிக்கு எதிராக தொடர்ச்சியாக இரண்டு ஆட்டங்களில் விளையாடியது. சென்னையில் அவர்களின் ஆட்டம் டிரா ஆன நிலையில் கொச்சி ஆட்டத்தில் மூன்று கோல்கள் அடித்தனர்.

ISL 2019-20 : Mumbai City FC vs Odisha FC match No.12 preview

ஒரு வெற்றிக்கும் பிறகு மும்பை அணி தற்போது ஒடிசா அணிக்கு எதிராக களம் இறங்குகிறது. தற்போது இரண்டு தோல்விகளுக்குப் பிறகு ஒடிசா ஒரு வெற்றியைப் பெற நினைக்கிறது.

ஜார்ஜ் கோஸ்டாவின் மும்பை சிட்டி எஃப்சி அணி ஒடிசா அணிக்கு எதிராக விளையாடும்போது ஒரு அழுத்தத்தை உணர்வதாக தெரிவித்தார். அதே நேரத்தில் ஜோசப்கோம்பாவின் ஒடிசா எஃப்சி நல்ல ஃபார்மில் உள்ளது. அதை அவர் அப்படியே வைத்திருக்க விரும்புகிறார்.

இருப்பினும், ஒடிசாவின் ஆட்டம் தொடக்க இரண்டு போட்டிகளில் நான்கு கோல்கல் என்ற நிலையில் இருந்தது. பின்னர், 10 பேர் கொண்ட ஜாம்ஷெட்பூர் எஃப்சிக்கு எதிராக அவர்களின் ஆட்டம் மிகவும் பலவீனமாக இருந்தது.

இது குறித்து பேசிய ஒடிசா அணியின் பயிற்சியாளர் கோம்பா "எங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. முதல் ஆட்டத்தில் நாங்கள் சில தவறுகளை செய்திருக்கலாம். ஆனால் இரண்டாவது ஆட்டத்தில், நாங்கள் எங்கள் விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தினோம் என்று நினைக்கிறேன்.

சிறிய தவறுகளை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் நாங்கள் விளையாட்டைக் கட்டுப்படுத்தி நிறைய வாய்ப்புகளை உருவாக்கினோம். அணி சிறப்பாக செயல்படுகிறது என்று நான் நினைக்கிறேன். எங்கள் அணி சிறப்பாக செயல்படும் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

ஒடிசா எஃப்சி இதுவரை நடந்த இரண்டு போட்டிகளிலும் இறுதி 10 நிமிடங்களில் எதிர் அணிக்கு வெற்றி வாய்ப்பை வழங்கியது. இது கோம்பாவும் அவரது அணியும் செயல்பட வேண்டிய ஒரு தருணம். நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சிக்கு எதிரான போட்டியில் வெளியேற்றப்பட்ட கார்லோஸ் டெல்கடோ இந்த ஆட்டத்தில் இல்லாதது அந்த அணிக்கு ஒரு பலவீனமே.

அதே நேரத்தில் கோஸ்டாவும் ஒடிசா அணியை இலகுவாக எடுத்துக் கொள்ள தயாராக இல்லை.

டெல்லி டைனமோஸ் என்ற பெயரில் இருந்த "ஒடிசா எஃப்சி, கடந்த சீசனில் நன்றாக விளையாடியது மற்றும் நிறைய வாய்ப்புகளையும் உருவாக்கியது. நாங்கள் அவர்களை மதிக்க வேண்டும், அது எளிதாக இருக்காது என்று எனக்குத் தெரியும்" என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய கோஸ்டா, "எங்கள் இரண்டு ஆட்டங்களுக்குப் பிறகு நான் நூறு சதவீதம் மகிழ்ச்சியாக இல்லை. இன்னும் கடினமாக உழைக்க வேண்டும், நன்றாக செய்ய வேண்டும் என நினைக்கிறேன். எனது வீரர்கள் தினமும் கடினமாக உழைக்கிறார்கள், ஒன்றாக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்" என்று அவர் கூறினார்.

மும்பை டிஃபென்டர் மாடோ கிரிகிக்கின் சேவையை தற்போது இழக்க நேரிடும். கடந்த ஆட்டத்தில் சந்தித்த தோல்வியில் இருந்து மீண்டு வந்த ஸ்ட்ரைக்கர் மோடோ சகோவு தற்போது நன்றாக விளையாட முடியுமா ? என்ற சந்தேகத்திற்குரியவராக இருக்கும்போது, பவுலோ மச்சாடோதான் ஆட்டத்தை தொடங்குவதற்கு தகுதியானவராக இருப்பார் என்கிறார்.

மும்பை சிட்டி எஃப்சி அணி தங்கள் சொந்த மண்ணில் வெற்றியைப் பெற முடியுமா? அல்லது ஒடிசா எஃப்சி இந்த சீசனின் முதல் புள்ளிகளை எடுக்குமா?

Story first published: Thursday, October 31, 2019, 18:01 [IST]
Other articles published on Oct 31, 2019
English summary
ISL 2019-20 : Mumbai City FC vs Odisha FC match No.12 preview.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+