For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நார்த் ஈஸ்ட் அணியை பந்தாடிய ஏடிகே.. 3 கோல் அடித்து அபார வெற்றி!!

கவுஹாத்தி : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி - ஏடிகே அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் ஏடிகே எஃப்சி அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 33 ஆம் நாள் ஆட்டம் கவுஹாத்தியில் உள்ள இந்திரா காந்தி அதெலட்டிக் ஸ்டேடியத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி - ஏடிகே அணிகள் இடையே நடைபெற்றது.

ISL 2019-20 : North East United FC vs ATK match 33 report

இதில் டாஸ் வென்ற நார்த் ஈஸ்ட் அணி இடது புறம் இருந்து ஆட்டத்தைத் தொடங்கியது. ஆட்டத்தின் 9 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன். ஆட்டத்தின் 11 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் வில்லியம்ஸ் அற்புமாக ஒரு கோல் அடித்தார்.

ஆட்டத்தின் 35 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் கிருஷ்ணா ஒரு கோல் அடித்து அசத்தினார். பின்னர் கூடுதலாக இரண்டு நிமிடங்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ISL 2019-20 : North East United FC vs ATK match 33 report

இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் முதல் பாதியில் ஏடிகே அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இதையடுத்து ஆட்டத்தின் 2 ஆவது பாதி தொடங்கியது. ஆட்டத்தின் 50 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் ட்ரியாடிஸ்க்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஆட்டத்தின் 70 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் லூடோசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 71 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் பிராபிர்க்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019-20 : North East United FC vs ATK match 33 report

76 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் சினேஜுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 83 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டது. அதே 83 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் அரிந்தமிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

பின்னர் 90 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியில் மாற்றம் செய்யப்பட்டது. ஆட்டத்தின் இறுதியில் 4 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டன. அப்போது ஏடிகே அணியின் கிருஷ்ணா மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

இதையடுத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் ஏடிகே எஃப்சி அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Story first published: Sunday, December 8, 2019, 13:42 [IST]
Other articles published on Dec 8, 2019
English summary
ISL 2019-20 : North East United FC vs ATK match 33 report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+