For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நார்த் ஈஸ்ட் அணியை காலி செய்த பெங்களூரு.. 2 கோல் அடித்து அபார வெற்றி!

கவுஹாத்தி : ஐஎஸ்எல் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் - பெங்களூரு எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் பெங்களூரு அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 40 ஆம் நாள் ஆட்டம் கவுஹாத்தியில் உள்ள இந்திரா காந்தி அதெலட்டிக் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதல் பாதி ஆட்டத்தைத் தொடங்கியது.

ISL 2019-20 : North East United FC vs Bengaluru FC match 40 report

தொடக்கம் முதலே இரு அணிகளும் கடுமையான மோதல் போக்கை கடைப்பிடித்தன. ஆட்டம் போகப் போக சூடு பிடித்தது.

ஆட்டத்தின் 41 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் ரெடீமுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 42 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் பார்த்தலுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019-20 : North East United FC vs Bengaluru FC match 40 report

இதையடுத்து கூடுதலாக இரண்டு நிமிடங்கள் வழங்கப்பட்டன. பின்னர் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் இரு அணிகளுமே கோல் எதுவும் போடவில்லை. இதையடுத்து 0 - 0 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.

இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. 46 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆட்டத்தின் 68 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் சுனில் ஷேத்ரி ஒரு கோல் அடித்து அசத்தினார்.

ISL 2019-20 : North East United FC vs Bengaluru FC match 40 report

ஆட்டத்தின் 70 மற்றும் 77 ஆவது நிமிடங்களில் நார்த் ஈஸ்ட் அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆட்டத்தின் 81 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் ஷெரன் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

83 மற்றும் 90 நிமிடங்களில் பெங்களூரு அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. இதையடுத்து கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. பின்னர் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து பெங்களூரு அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Photos Courtesy : ISL Media

Story first published: Thursday, December 19, 2019, 18:47 [IST]
Other articles published on Dec 19, 2019
English summary
ISL 2019-20 : North East United FC vs Bengaluru FC match 40 report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+