For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் - கோவா மோதிய போட்டி டிரா.. கடைசி நேரத்தில் கோல் அடித்து அசத்தல்!

கவுஹாத்தி : ஐஎஸ்எல் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி - எஃப்சி கோவா அணிகளிடையே மோதல் நடைபெற்றது. இரண்டு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்ததையடுத்து ஆட்டம் டிராவில் முடிந்தது.

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 13 ஆம் நாள் ஆட்டம் கவுஹாத்தியில் உள்ள இந்திரா காந்தி அதெலட்டிக் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி - எஃப்சி கோவா அணிகள் மோதின. டாஸ் வென்ற நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி அணி ஆட்டத்தைத் தொடங்கியது.

ISL 2019-20 : North East united FC vs FC Goa match 13 report

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இருஅணிகளும் கடுமையாக மோதின. இரண்டு அணிகளுமே கோல் அடிக்க தொடர்ந்து முயற்சி செய்தன. இதையடுத்து ஆட்டத்தின் 31 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் பௌமஸ் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

ஆட்டத்தின் 33 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் பிரதானுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதே போல் 37 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் லூடோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கூடுதலாக 2 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது.

பின்னர் ஆட்டத்தின் முதல் பாதி முடிவுக்கு வந்தது. இதையடுத்து எஃப்சி கோவா அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ISL 2019-20 : North East united FC vs FC Goa match 13 report

இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. அப்போது 54 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் கியான் ஒரு கோல் அடித்து அசத்தினார். 58 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் ரெடீமுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 68 மற்றும் 72 ஆவது நிமிடங்களில் நார்த் ஈஸ்ட் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 74 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் ரெடீம் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

ISL 2019-20 : North East united FC vs FC Goa match 13 report

பின்னர் ஆட்டத்தின் ஆட்டத்தின் 77 மற்றும் 83 ஆவது நிமிடங்களில் இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதே போல் 84 ஆவது நிமிடத்தில் கோவா அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. இதையடுத்து கூடுதலாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்டன.

ஆட்டத்தின் 90 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் லென் டாங்கலுக்கு சிவப்பு அட்டை காண்பிப்பட்டது. பின்னர் ஆட்டம் முடிவடையப் போகும் கடைசி நிமிடத்தில் கோவா அணியின் மான்விர் அற்புதமாக ஒரு கோல் அடித்து அசத்தினார்.

ISL 2019-20 : North East united FC vs FC Goa match 13 report

இதையடுத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. நார்த் ஈஸ்ட் அணியும் கோவா அணியும் தலா இரண்டு கோல்கள் அடித்ததையடுத்து ஆட்டம் டிராவில் முடிந்தது.

Photos Courtesy : ISL Media

Story first published: Saturday, November 2, 2019, 19:35 [IST]
Other articles published on Nov 2, 2019
English summary
ISL 2019-20 : North East united FC vs FC Goa match 13 report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+