For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணிக்கு ஷாக் கொடுக்குமா எஃசி கோவா அணி? பரபர ஐஎஸ்எல் மோதல்!

கவுஹாத்தி : இந்தியன் சூப்பர் லீக்கில் 2019-20 சீசனில் இது வரை தோல்வி அடையாத நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி மற்றும் எஃப்.சி கோவா அணிகளுக்கிடையே கவுஹாத்தி இந்திராகாந்தி அதெலட்டிக் ஸ்டேடியத்தில் மோதல் நடக்கிறது. இது ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும்.

நார்த் ஈஸ்ட் அணியின் பயிற்சியாளர் ராபர்ட் ஜார்னியின் அதிரடி வீரர்கள், இரண்டு போட்டிகளில் இருந்து நான்கு புள்ளிகளுடன் ஒரு அற்புதமான தொடக்கத்தைப் பெற்றுள்ளனர்.

ISL 2019-20 : North East United FC vs FC Goa match no. 13 result

பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக ஒரு புள்ளியை நார்த் ஈஸ்ட் அணியினர் பெற்றனர். இது பல அணிகள் அடையாத ஒரு சாதனையாகும், மேலும் ஒடிஷா எஃப்சிக்கு எதிரான விறுவிறுப்பான வெற்றியையும் பெற்றது.

நார்த் ஈஸ்ட் அணியைப் பொறுத்தவரை தங்கள் விளையாட்டை சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றும் போக்கைக் காட்டியுள்ளது. ஒடிஷாவுக்கு எதிரான அந்த அணியின் ஆட்டம் வலுவான பெங்களூருக்கு எதிராக அவர்கள் எச்சரிக்கையாக இருந்தனர். ஆனாலும் இரண்டாவது பாதியில், நார்த் ஈஸ்ட் அணிக்கு ஒடிஷா அணி கடும் அழுத்தத்தைக் கொடுத்தது. இருப்பினும் ஆட்டத்தின் பிற்பகுதியில் நார்த் ஈஸ்ட் வெற்றி பெற முடிந்தது.

இந்த வெற்றிக்கு ஒடிஷாவின் கார்லோஸ் டெல்கடோவுக்கு சிவப்பு அட்டை வழங்கியது பெரும் உதவியாக இருந்தது.

ISL 2019-20 : North East United FC vs FC Goa match no. 13 result

இப்போது, நார்த் ஈஸ்ட் அணிக்கு எஃப்.சி கோவா வடிவில் ஒரு சோதனை காத்திருக்கிறது. பொதுவாக கோவா அணிக்கு எதிராக நடைபெற்ற 10 போட்டிகளில் நார்த் ஈஸ்ட் அணி இரண்டு ஆட்டங்களில் மட்டுமே வென்றுள்ளனர். ஆனாலும் செர்ஜியோ லோபரா கடந்த 2017 இல் பொறுப்பேற்றதிலிருந்து கோவா ஒருபோதும் கவுஹாத்தியில் வென்றதில்லை.

ISL 2019-20 : North East United FC vs FC Goa match no. 13 result

இது குறித்து பேசிய நார்த் ஈஸ்ட் அணியின் பயிற்சியாளர் ராபர்ட் ஜார்னி " இது வரை இருந்து புள்ளிவிவரங்கள் நாங்கள் உடைப்போம் என கூறுகிறார். கோவா அணிக்கு மட்டுமல்லாமல் மற்ற அணிகளுடன் விளையாடும்போதும் நாங்கள் ஒரு சிறப்பான திட்டம் வைத்திருக்கிறோம் என்றார்.

ISL 2019-20 : North East United FC vs FC Goa match no. 13 result

தொடர்ந்து பேசிய அவர் , " தற்போது மிக திறமையான வீரர்களைக் கொண்டிருப்பதற்கு முன்பு நாங்கள் பல சிறந்த அணிகளுக்கு எதிராக விளையாடியுள்ளோம். விளையாட்டில் அதிக கவனம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல் ஆடுகளத்தில் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும், "என்றார் ஜார்னி.

ISL 2019-20 : North East United FC vs FC Goa match no. 13 result

நார்த் ஈஸ்ட் அணியின் ஸ்டார் ஸ்ட்ரைக்கர் அசாமோ கியான், இன்னும் முழு உடற்தகுதியை அடையவில்லை என்றாலும், அவரது திறமையான உள்ளுணர்வு இன்னும் அப்படியே இருப்பதைக் காட்டுகிறது. ரிடீம் ட்லாங் மற்றும் டிஃபென்டர் கை ஹீரிங்ஸ் போன்ற வீரர்கள் இதுவரை ஆர்வத்துடன் உள்ளனர்.

ISL 2019-20 : North East United FC vs FC Goa match no. 13 result

எஃப்.சி கோவா இதுவரை நடந்த சீசனில் எல்லாம் மிகுந்த ஆர்வத்துடன் தங்களது ஆட்டத்தைத் தொடங்கினர். அவர்கள் முதல் ஆட்டத்தில் சென்னையின் எஃப்.சி. அணியை வெற்றி பெற்றனர். ஆனால் பெங்களூரு எஃப்சிக்கு எதிராக அவர்கள் விளையாட போராடினார்கள். மேலும் கோவா அணியின் ஃபெரான் கொரோமினாஸிடமிருந்து அவர்கள் தாமதமாக அபராதம் விதித்தனர்.

ISL 2019-20 : North East United FC vs FC Goa match no. 13 result

"சென்னையின் எஃப்சிக்கு எதிரான முதல் போட்டியின் பின்னர் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், ஏனென்றால் கடினமான சூழ்நிலைகளில் அணி மிகவும் சிறப்பாக விளையாடியது. எங்களிடம் மூன்று வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இருந்தனர், சிலர் காயமடைந்தனர். ஆனால் இரண்டாவது போட்டி எங்களுக்கு நன்றாக இல்லை. பெங்களூருக்கு எதிராக நாங்கள் நிறைய கஷ்டப்பட்டோம். ஒவ்வொரு ஆட்டமும் வித்தியாசமானது. நார்த் ஈஸ்ட் அணிக்கு எதிரான போட்டி கடினமான இருக்கும் என்று நான் நினைக்கிறேன், "என்கிறார் கோவா அணியின் பயிற்சியாளர் லோபரா.

கோவா அணியினர் பெங்களூரு அணிக்கு எதிரான விளையாட்டை ஒரு ஒழுங்கின்மை என்று கருதினார்கள். மேலும் கோவாவின் வெளி நாட்டு வீரர்கள் நார்த் ஈஸ்ட் அணிக்கு ஒரு அச்சுறுத்தலாகவே உள்ளனர்

ISL 2019-20 : North East United FC vs FC Goa match no. 13 result

இந்திய வீரர்களான சீமின்லன் டங்கல், பிராண்டன் பெர்னாண்டஸ் மற்றும் செரிடன் பெர்னாண்டஸ் ஆகியோர் லோபராவுக்கு விதிவிலக்கானவர்கள். அதே நேரத்தில் அகமது ஜஹூ மற்றும் கொரோமினாஸ் போன்றவர்களிடமிருந்து ஒரு சிறப்பாக ஆட்டத்தை தருவார்கள் என்கிறார் பயிற்சியாளர்.

Photos Courtesy : ISL Media

Story first published: Saturday, November 2, 2019, 12:11 [IST]
Other articles published on Nov 2, 2019
English summary
ISL 2019-20 : North East United FC vs FC Goa match no. 13 result
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+