For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ISL 2019-20 : இதை எதிர்பார்க்கலையே.. நார்த் ஈஸ்ட் அணிக்கு ஷாக் கொடுத்த ஹைதராபாத்!

கவுகாத்தி : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி மற்றும் ஹைதராபாத் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் ஹைதராபாத் எஃப்சி அணி, 5-1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஆறாவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 86வது நாள் ஆட்டம் கவுகாத்தியில் உள்ள இந்திரா காந்தி அத்லெட்டிக் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

ISL 2019-20 : North East United FC vs Hyderabad FC match 86 report

இந்த சீசனில் இதுவரை 16 மேட்சுகள் ஆடி 13 புள்ளிகளை பெற்று ஒன்பதாவது இடத்தில் இருந்த‌ நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணி, 17 ஆட்டங்களில் 7 புள்ளிகள் பெற்று பத்தாவது இடத்தில் இருந்த‌ ஹைதராபாத் எஃப்சி அணியை நேருக்கு நேர் சந்தித்த‌து.

நார்த் ஈஸ்ட் யுனைடெட்டும், ஹைதராபாத் எஃப்சியும் முறையே ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடங்களில் இருந்த‌தால், இன்றைய போட்டியானது இந்த சீசனில் கடைசி இடத்தில் இடம்பெறுவதை தவிர்க்க இரண்டு அணிகளுக்கிடையே நடக்கும் பலப்பரீட்சையாகவே இருந்தது.

தனது கடந்த ஆட்டத்தில் ஒடிசா எஃப்சியிடம் புபனேஸ்வரில் 2- 1 என்ற கோல் கணக்கில் தோற்ற‌ நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி, இன்று தனது சொந்த மண்ணில் ஹைதராபாத் எஃப்சியை எதிர்கொள்வதால் சற்றே தெம்புடன் இருந்தது. 12 ஆட்டங்களுக்கு முன் ஹைதராபாத் அணிக்கு எதிராக பெற்ற வெற்றி தான் இந்த சீசனில் இது வரை நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் கடைசி வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாம்ஷெட்பூர் எஃப்சிக்கு எதிராக ஹைதராபாத்தில் நடைபெற்ற தன்னுடைய கடந்த ஆட்டத்தை சமனில் முடித்த ஹைதராபாத் எஃப்சி, மோசமான அணி என்னும் பெயர் எடுப்பத்தை தடுக்க தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் இன்று எடுத்தது.

டாஸ் வென்ற நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணி வலது புறமிருந்து தனது ஆட்டத்தை தொடங்கியது. 12வது நிமிடத்தில் ஹைதராபாத் எஃப்சி அணியின் லிஸ்டன், ஒரு கோல் அடித்து தனது அணியின் கணக்கை தொடங்கினார். அதற்கு அடுத்த நிமிடமே, அதே அணியின் மார்செலினோ ஒரு கோல் அடித்தார்.

33வது நிமிடத்தில் ஹைதராபாத் எஃப்சி அணியின் நிகிலுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்க‌ப்பட்டது. 35வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் கியோக் ஒரு கோல் அடித்தார். 41வது நிமிடத்தில் ஹைதராபாத் எஃப்சி அணியின் லிஸ்டன் இன்னொரு கோல் அடித்து ரசிகர்களை உற்சாகப் படுத்தினார்.

45வது நிமிடத்தில் 2 கூடுதல் நிமிடங்கள் அளிக்கப்பட்டன. ஹைதராபாத் எஃப்சி அணியின் சஹிலுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்க‌ப்பட்டது. இதைத் தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் ஹைதராபாத் எஃப்சி அணி 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில், ஹைதராபாத் எஃப்சி தனது அணியில் 46வது நிமிடத்தில் ஒரு மாற்றத்தை செய்தது. 55வது நிமிடத்தில் அந்த அணியின் யாசிர் ஒரு கோல் அடித்தார். 58வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் கல்லெகோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்ட நிலையில் அந்த அணி ஒரு மாற்றத்தை செய்தது.

பின்னர் 61வது நிமிடத்தில் இரு அணிகளும் மாற்றங்களை செய்தன. 69வது நிமிடத்தில் ஹைதராபாத் எஃப்சி மீண்டும் ஒரு முறை மாற்றத்தை செய்தது. 78வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் சாவ்சுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 81வது நிமிடத்தில் அந்த அணி ஒரு மாற்றத்தை செய்தது.

88வது நிமிடத்தில் ரசிகர்களின் பலத்த ஆரவாரத்துக்கிடையே ஹைதராபாத் எஃப்சியின் மார்செலினோ ஒரு கோல் அடித்து தனது அணியை அசைக்க முடியாத இடத்தில் நிறுத்தினார். பின்னர் ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில் ஹைதராபாத் எஃப்சி அணி 5-1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Photos Courtesy : ISL Media

Story first published: Friday, February 21, 2020, 17:25 [IST]
Other articles published on Feb 21, 2020
English summary
ISL 2019-20 : North East United FC vs Hyderabad FC match 86 report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+