Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போராடிய நார்த் ஈஸ்ட் - மும்பை சிட்டி அணிகள்.. டிராவில் முடிந்த ஆட்டம்!!

கவுஹாத்தி : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் இன்றைய கால்பந்து போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி மற்றும் மும்பை சிட்டி எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் இரு அணிகளும் தலா இரண்டு புள்ளிகள் எடுத்தன. இதையடுத்து ஆட்டம் 2 - 2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 25 ஆம் நாள் ஆட்டம் கவுஹாத்தியில் உள்ள இந்திரா காந்தி அதெலட்டிக் ஸ்டேடியத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணிக்கும் மும்பை சிட்டி எஃப்சி அணிக்கும் இடையே நடைபெற்றது.

ISL 2019-20 : North East United FC vs Mumbai City FC match 25 report

இதில் டாஸ் வென்ற நார்த் ஈஸ்ட் அணி இடது புறமிருந்து ஆட்டத்தை தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய 9 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் ட்ரியாடிஸ் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

பின்னர் ஆட்டத்தின் 23 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் செர்மிட்டி ஒரு கோல் அடித்து அசத்தினார். ஆட்டத்தின் 32 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் செர்மிட்டி மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

ISL 2019-20 : North East United FC vs Mumbai City FC match 25 report

இதையடுத்து ஆட்டத்தின் 42 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் கியான் அற்புதமாக ஒரு கோல் அடித்தார். இதனைத் தொடர்ந்து கூடுதலாக இரண்டு நிமிடங்கள் வழங்கப்பட்டன.

பின்னர் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது நார்த் ஈஸ்ட் மற்றும் மும்பை சிட்டி அணிகள் தலா 2 கோல்கள் போட்டு சமநிலையில் இருந்தன.

ISL 2019-20 : North East United FC vs Mumbai City FC match 25 report

இதையடுத்து ஆட்டத்தின் 2 ஆவது பாதி தொடங்கியது. 64 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. 75 ஆவது நிமிடத்தில் மும்பை அணியில் மாற்றம் செய்யப்பட்டது.

ஆட்டத்தின் 80 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் சுபாஸிசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 83 ஆவது நிமிடத்தில் மும்பை அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டது.

ISL 2019-20 : North East United FC vs Mumbai City FC match 25 report

இதையடுத்து கூடுதலாக மூன்று நிமிடங்கள் வழங்கப்பட்டன. பின்னர் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இறுதியில் நார்த் ஈஸ்ட் மற்றும் மும்பை சிட்டி அணிகள் தலா இரண்டு கோல்கள் அடித்தன. இதையடுத்து 2 - 2 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவில் முடிந்தது.

Story first published: Thursday, November 28, 2019, 15:00 [IST]
Other articles published on Nov 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+