Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐஎஸ்எல் போட்டி.. ஒடிசாவை வீழ்த்தி நார்த் ஈஸ்ட் அணி அபார வெற்றி!

கவுஹாத்தி : இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நார்த் ஈஸ்ட் 2 - 1 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

6ஆவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 7 ஆம் நாள் ஆட்டம் கவுஹாத்தியில் உள்ள இந்திரா காந்தி அத்தெலட்டிக் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி அணியும் ஒடிசா அணியும் மோதின.

ISL 2019-20 : North East United FC vs Odisha FC match 7 report

இதில் டாஸ் வென்ற ஒடிசா அணி இடது புறம் ஆட்டத்தை தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய 2 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் ரெடீம் அற்புதமாக ஒரு கோல் அடித்தார். இதையடுத்து இரு அணிகளும் ஆக்ரோஷமாக மோதின.

ஆட்டத்தின் 21 ஆவது நிமிடத்தில் அணியின் சுபத்திற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் நார்த் ஈஸ்ட் அணியின் டிரிதாஸ்க்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019-20 : North East United FC vs Odisha FC match 7 report

இதையடுத்து 45 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் ராய் மற்றும் அஸ்மோ கியானுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் முதல் பாதியில் நார்த் ஈஸ்ட் அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது..

இதையடுத்து ஆட்டத்தின் இண்டாவது பகுதி தொடங்கியது. 61 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன.ஆட்டத்தின் 71 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் சிஸ்கோ ஒரு கோல் அடித்து அசத்தினார்.

ISL 2019-20 : North East United FC vs Odisha FC match 7 report

இதைத் தொடர்ந்து 73 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் டெல்காடோவுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.

79 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதையடுத்து 84 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் கியானி அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

ISL 2019-20 : North East United FC vs Odisha FC match 7 report

பின்னர் 87 மற்றும் 89 ஆவது நிமிடங்களில் இரு அணி வீரர்களும் மாற்றம் செய்யப்பட்டனர். 89 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் ரெடீமுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து ஆட்டம் நிறைவுக்கு வந்தது. இறுதியில் 2 - 1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் அணி ஒடிசா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Photos Courtesy : ISL Media

Story first published: Sunday, October 27, 2019, 14:31 [IST]
Other articles published on Oct 27, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+