Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019 - 20 : அசத்தல் கோல் அடித்த பெங்களூரு.. ஒடிசா அணியை வீழ்த்தி அபார வெற்றி!

புனே : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் இன்றைய கால்பந்து போட்டியில் ஒடிசா எஃப்சி - பெங்களூரு எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் பெங்களூரு அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 31 ஆம் நாள் ஆட்டம் புனேவில் உள்ள ஸ்ரீ ஷிவ் சத்ரபதி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் மைதானத்தில் ஒடிசா எஃப்சி - பெங்களூரு எஃப்சி அணிகள் இடையே நடைபெற்றது.

ISL 2019-20 : Odisha FC vs Bengaluru FC match no.31 report

இதில் டாஸ் வென்ற ஒடிசா அணி வலது புறம் இருந்து ஆட்டத்தைத் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதில் இருந்து இரு அணிகளுமே கடுமையாக மோதின. இதையடுத்து ஆட்டத்தின் 39 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் ஜுனன் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

பின்னர் 44 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் ஆஷிசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதி நிறைவடைந்தது. இதில் பெங்களூரு அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

ISL 2019-20 : Odisha FC vs Bengaluru FC match no.31 report

இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. ஆட்டத்தின் 71 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியில் மாற்றம் செய்யப்பட்டது. ஆட்டத்தின் 77 மற்றும் 88 ஆவது நிமிடங்களில் இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.

ISL 2019-20 : Odisha FC vs Bengaluru FC match no.31 report

இதனைத் தொடர்ந்து 82 மற்றும் 85 நிமிடங்களில் ஒடிசா அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. பின்னர் கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இதில் பெங்களூரு அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Photos Courtesy : ISL Media

Story first published: Saturday, December 7, 2019, 14:46 [IST]
Other articles published on Dec 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+