Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019 - 20 : புரட்டி எடுத்து வென்ற ஒடிசா.. பரிதாப தோல்வி அடைந்த சென்னை!

புவனேஸ்வர் : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் ஒடிசா எஃப்சி - சென்னையின் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் ஒடிசா எஃப்சி அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 53 ஆம் நாள் ஆட்டம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னையின் எஃப்சி அணி முதல் பாதி ஆட்டத்தைத் தொடங்கியது.

ISL 2019-20 : Odisha FC vs Chennaiyin FC match result

ஆட்டத்தின் தொடக்கத்தில் இரு அணிகளுமே மந்தமாக ஆடின. இதைத் தொடர்ந்து 37 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் ஜெர்ரி அற்புதமாக ஒரு கோல் அடித்தார். பின்னர் 41 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் வினித் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

இதையடுத்து கூடுதலாக 2 நிமிடங்கள் வழங்கப்பட்டன. பின்னர் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து ஒடிசா எஃப்சி அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ISL 2019-20 : Odisha FC vs Chennaiyin FC match result

இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. ஆட்டத்தின் 64 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் தாப்பாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஆட்டத்தின் 67 மற்றும் 74 ஆவது நிமிடங்களில் ஒடிசா அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. 78 மற்றும் 79 ஆவது நிமிடங்களில் சென்னை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன.

இதே போல் 82 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. 90 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் பெரேசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019-20 : Odisha FC vs Chennaiyin FC match result

இதையடுத்து இரண்டாம் பாதி முடிவில் கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அதில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. முடிவில் ஒடிசா எஃப்சி அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Story first published: Tuesday, January 7, 2020, 23:09 [IST]
Other articles published on Jan 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+