For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோல் மழை.. ஒடிசா அணியை தோற்கடித்து வெற்றி வாகை சூடியது கோவா!

புவனேஸ்வர் : புவனேஸ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டு அரங்கில் இது வரை தான் பங்கு கொண்ட அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற‌ ஒடிசா எஃப்சி, தனது சாதனையை நடைபெற்ற‌ எஃப்சி கோவாவுக்கு எதிரான இந்தியன் சூப்பர் லீக்கின் (ஐஎஸ்எல்) 69வது ஆட்டத்தில் நழுவவிட்டது. அதாவது 4 - 2 என்ற கோல் கணக்கில் எஃப்சி கோவா அணி, ஒடிசா எஃப்சி அணியை வீழ்த்தியது.

கோச் ஜோசப் கொம்பவ் தலைமையிலான ஒடிசா எஃப்சி தொடர்ந்து நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று வந்த நிலையில், பெங்களூரு எஃப்சிக்கு எதிராக பெங்களூருவில் கடந்த வாரம் நடந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது. அது மட்டுமில்லாது, இதுவரை முதல் மூன்று அணிகளுக்கு (ஏடிகே, எஃப்சி கோவா, பெங்களூரு எஃப்சி), எதிராக ஒடிசா எஃப்சி அணி கோல் எதுவும் எடுத்ததில்லை.

ISL 2019-20 : Odisha FC vs FC Goa match 69 report

எனவே, இது வரை தோற்காத‌ சொந்த மண்னில் ஆட்டம் நிகழ்ந்தாலும், ஒடிசா எஃப்சி, மிகவும் வலுவான எஃப்சி கோவாவை வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. அதே சமயம், புள்ளிகள் பட்டியலில் ஏடிகே மற்றும் பெங்களூருவுடன் கடும் போட்டியில் உள்ள கோவா, வெளியூரில் நடந்த கடந்த இரு ஆட்டங்களில் தோல்வியை தழுவியுள்ள போதிலும், ஒடிசாவுக்கு கடும் சவாலைத் தர காத்திருந்தது.

டாஸ் வென்ற எஃப்சி கோவா அணி, இடது புறமிருந்து முதல் பாதி ஆட்டத்தைத் தொடங்கியது. சரியாக 21வது நிமிடத்தில் கோவா அணியின் வினித் ஒரு கோல் அடித்து தனது அணியின் கணக்கை சிறப்பாக தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து 24வது நிமிடத்தில் எஃப்சி கோவா அணியின் ஜாக்கி ஒரு கோல் அடித்து அணியின் கோல் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தினார்.

ISL 2019-20 : Odisha FC vs FC Goa match 69 report

இதனால் பதட்டத்துக்குள்ளான ஒடிசா அணியை மேலும் பீதிக்குள்ளாக்கும் வகையில், 27வது நிமிடத்தில் ஜாக்கி இன்னொரு கோல் அடித்தார். இதன் பிறகே சுதாரித்த ஒடிசா எஃப்சி அணி, முதல் பாதி முடியும் வரை எஃப்சி கோவா அணியை மேலும் கோல் எதுவும் அடிக்காத வகையில் தடுத்தது. இதைத் தொடர்ந்து 3 - 0 என்ற கோல் கணக்கில் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. பின்னர் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது.

இரண்டாம் பாதி ஒடிசாவுக்கு சிறிது அதிர்ஷ்டத்தை தந்தது என்றே கூறலாம். 59வது நிமிடத்தில் அந்த அணியின் ஒன்வு ஒரு கோல் அடித்தார். 64வது நிமிடத்தில் எஃப்சி கோவா அணியில் மாற்றம் செய்யப்பட்டது. ஆனாலும் கோவாவால் ஒடிசாவை தடுக்க முடியாத நிலையில், 65வது நிமிடத்தில் ஒடிசா எஃப்சியின் ஒன்வு இன்னொரு கோல் அடித்து தனது அணியின் கோல் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தினார்.

ISL 2019-20 : Odisha FC vs FC Goa match 69 report

82வது நிமிடத்தில் கோவா அணியின் எடு பீடியாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 85வது நிமிடத்தில் அதே அணியின் பவுமசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 89வது நிமிடத்தில் எஃப்சி கோவா அணியில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், 90வது நிமிடத்தில் அந்த அணியின் பிராண்டனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்ட‌து.

ஆட்டம் முடியும் என எதிரபார்க்கப்பட்ட 90வது நிமிடத்தில் ஆறு நிமிடங்கள் அதிகரிக்கப்பட்ட நிலையில், கோவாவின் கோரோ ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். பின்னர் கோவா அணியில் மாற்றம் செய்யப்பட்டு, ஒடிசா அணியின் கௌரவ் போராவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்ட நிலையில், ஆட்டம் முடிவுக்கு வந்து எஃப்சி கோவா அணி 4 - 2 என்ற கோல் கணக்கில் ஒடிசா எஃப்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Story first published: Thursday, January 30, 2020, 19:46 [IST]
Other articles published on Jan 30, 2020
English summary
ISL 2019-20 : Odisha FC vs FC Goa match 69 match report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+