For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பலம் குறைந்த ஒடிசா - ஹைதராபாத் மோதும் போட்டி.. வெற்றிக்கு போராட இரு அணிகளும் ரெடி!

புனே : இந்தியன் சூப்பர் லீக் போட்டியில் ஒடிசா எஃப்சி மற்றும் ஹைதராபாத் எஃப்சி அணிகளுக்கு இடையே புனேவில் உள்ள ஸ்ரீ ஷிவ் சத்ரபதி விளையாட்டு அரங்கில் நடைபெறும் போட்டியில் இரு தரப்பினரும் நேருக்கு நேர் மோதுகிறார்கள்.

ஒடிசா ஏழு ஆட்டங்களில் இருந்து ஆறு புள்ளிகளை பெற்று ஏழாவது இடத்தைப் பிடித்தாலும், ஹைதராபாத் நான்கு புள்ளிகளுடன் அட்டவணையில் கீழே உள்ளது. தங்களது கடைசி நான்கு போட்டிகளில் இருந்து இரண்டு கோல்கள் மட்டுமே பெற்றுள்ளது.

ISL 2019-20 : Odisha FC vs Hyderabad FC match 36 preview

ஒடிசா எஃப்சி அணி அவர்களின் கடைசி நான்கு போட்டிகளில், சென்னை எஃப்சிக்கு எதிராக ஒரு புள்ளியை மட்டுமே பெற முடிந்தது. பயிற்சியாளர் ஜோசப் கோம்பாவ் ஒரு சிறந்த கால்பந்தாட்டத்தை விளையாடுவதற்கான தனது விருப்பத்தைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசினார்.

"இது ஒரு முக்கியமான போட்டி. இது எங்களுக்கு ஒரு மிகப்பெரிய விளையாட்டு. நாங்கள் ஒன்பது புள்ளிகளைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளோம், பிளே-ஆஃப்களுக்காகவும் நாங்கள் போராடுகிறோம். இந்த மனநிலையை எடுத்துக்கொள்வது முக்கியம், எங்கள் மீது அழுத்தம் சேர்க்கக்கூடாது" என்று கோம்பாவ் கூறினார்.

கடந்த வாரம் பெங்களூரு எஃப்சிக்கு எதிரான அவர்களின் செயல்திறனில் இருந்து ஸ்பெயினின் பயிற்சியாளர் மிக வருத்தப்பட்டார். அங்கு அவர்கள் மூன்று புள்ளிகளை சமன் செய்ய முடியாமல் போனார்கள் . பல வாய்ப்புகள் கிடைத்தும் சமன் செய்ய முடியவில்லை. அவை இலக்கிற்கு முன்னால் வீணாகிவிட்டன. ஜிஸ்கோ ஹெர்னாண்டஸ், ஜெர்ரி மாவிஹ்மிங்டங்கா போன்றவர்களுக்கு கோல் அடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அவர்கள் கோல்கள் அடிக்கவில்லை.

அவர்கள் ஒப்புக்கொண்ட ஒன்பது புள்ளிகளில் நான்கு ஃப்ரீ-கிக் அல்லது கார்னர்-கிக் மூலம் கிடைத்துள்ளதால் அது அவர்களுக்கு சொந்த மண்ணில் ஒரு பிரச்சினையாக உள்ளது.

ஹைதராபாத் எஃப்சி பயிற்சியாளர் பில் பிரவுன் தனது வீரர்களை நம்பியுள்ளார். ஏனெனில் அவர் எஃப்.சி கோவாவிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தனது அணிக்கு எழுச்சியூட்ட வேண்டும். இதில் மோசமான விஷயம் என்னவென்றால் அவர்களின் நட்சத்திர வீரரான மார்செலின்ஹோ நான்கு மஞ்சள் அட்டைகளை பெற்றதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டார்.

"நாங்கள் ஒடிசாவையும், அவர்களின் பயிற்சியாளரையும் வீரர்களையும் மதிக்கிறோம், ஆனால் நாங்கள் ஒரு நன்றாக விளையாடி வருகிறோம். ஒரு பயிற்சியாளராக, எங்கள் அணியினர் விளையாடும் விதம் தோல்விகளால் விரக்தியடையாமல் பார்த்துக் கொள்வது தான். அது எனது பொறுப்பு, ஆனால் அவர்கள் விரக்தியடைந்தவர்கள் என்று நான் நினைக்கவில்லை."

"ஒடிசா அணி தங்கள் விளையாட்டுகளில் வீரர்களை உணர்வுப்பூர்மாக வைத்திருப்பதை விரும்புகிறது. ஆனால் உணர்வுகள் விளையாட்டுகளை வெல்ல வேண்டிய அவசியமில்லை, வாய்ப்புகளை நிச்சயமாக எடுத்துக்கொள்வதோடு, புதன்கிழமை இரவு வெற்றி பெற முயற்சி செய்வோம்" என்று பிரவுன் கூறினார்.

பிரவுனுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், சென்டர்-பேக் குர்தேஜ் சிங் மற்றும் இடது-பேக் சைடு சாஹில் பன்வார் ஆகியோர் மீண்டும் களத்தில் இறங்கியுள்ளனர்.

ஆனால் செல்வாக்கு மிக்க மிட்ஃபீல்டர் மார்கோ ஸ்டான் கோவிக், எஃப்.சி கோவாவுக்கு எதிரான ஹைதராபாத்தின் முந்தைய ஆட்டத்தில் தொடை எலும்பு காயத்தால் விளையாட முடியாமல் போனது.

இது அட்டவணையில் பின் தங்கிய இரு அணிகளுக்கிடையேயான ஒரு மோதல் நடைபெறவுள்ளது. அதே நேரத்தில் வெற்றியைப் பெற இரு அணிகளுமே தீவிரமாக போராடும்.

Story first published: Wednesday, December 11, 2019, 13:33 [IST]
Other articles published on Dec 11, 2019
English summary
ISL 2019-20 : Odisha FC vs Hyderabad FC match 36 preview
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+