Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 கோல்.. தெறிக்கவிட்ட ஒடிசா எஃப்சி அணி.. ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி!

புனே : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் ஒடிசா எஃப்சி - ஹைதராபாத் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் ஒடிசா எஃப்சி அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 36 ஆம் நாள் ஆட்டம் ஸ்ரீ ஷிவ் சத்ரபதி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஒடிசா அணி முதல் பாதி ஆட்டத்தைத் தொடங்கியது.

ISL 2019-20 : Odisha FC vs Hyderabad FC match 36 report

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் மிகக் கடுமையாக மோதின. ஆட்டத்தின் 11 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் வினித்துக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஆட்டத்தின் 27 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் டெல்காடோ அற்புதமாக ஒரு கோல் அடித்தார். பின்னர் 41 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் சிஸ்கோ ஒரு கோல் அடித்து அசத்தினார்.

இதைத் தொடர்ந்து கூடுதலாக ஒரு நிமிடம் வழங்கப்பட்டது. பின்னர் ஆட்டத்தில் முதல் பகுதி முடிவடைந்தது. இதையடுத்து ஒடிசா அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ISL 2019-20 : Odisha FC vs Hyderabad FC match 36 report

பின்னர் ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. 55 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் சுபத்துக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 64 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் வினித்துக்கு இரண்டாவது முறையாக மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ஆட்டத்தின் 65 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் போபோ ஒரு கோல் அடித்து அசத்தினார். 66 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. 76 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் பெரிஸ் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

ISL 2019-20 : Odisha FC vs Hyderabad FC match 36 report

73 மற்றும் 80 ஆவது நிமிடங்களில் ஹைதராபாத் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. 84 மற்றும் 86 ஆவது நிமிடங்களில் ஒடிசா அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. அடுத்து 89 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் ரோகித் ஒரு கோல் அடித்தார்.

ஆட்டத்தின் 90 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் திபெருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

பின்னர் கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து ஒடிசா அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Photos Courtesy : ISL Media

Story first published: Thursday, December 12, 2019, 18:29 [IST]
Other articles published on Dec 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+