For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ISL 2019-20 : சொந்த மண்ணில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி.. தெறிக்கவிட்ட ஒடிசா அணி!

புவனேஸ்வர் : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் ஒடிசா எஃப்சி - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் ஒடிசா எஃப்சி அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 47ஆம் நாள் ஆட்டம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜாம்ஷெட்பூர் அணி முதல் பாதி ஆட்டத்தைத் தொடங்கியது.

ISL 2019-20 : Odisha FC vs Jamshedpur FC match 47 match result and highlights

ஆட்டத்தின் 19 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் கவுரவ் போராவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆட்டத்தின் 28 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் அரிந்தன் அற்புதமாக ஒரு கோல் அடித்தார். 30 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் நாராயணுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

33 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் டெல்காடோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 38 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் மான்ராய் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

ISL 2019-20 : Odisha FC vs Jamshedpur FC match 47 match result and highlights

பின்னர் ஆட்டத்தின் 45 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் அரிந்தன் மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் ஒடிசா அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பகுதி தொடங்கியது. 62 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் சுபத்துக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 66 மற்றும் 67 ஆவது நிமிடங்களில் ஒடிசா அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. 71 மற்றும் 73 ஆவது நிமிடங்களில் இரு அணிகளிலும் மாற்றம் செய்யப்பட்டன.

ISL 2019-20 : Odisha FC vs Jamshedpur FC match 47 match result and highlights

78 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியில் மாற்றம் செய்யப்பட்டது. 79 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் அரிந்தத்திற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 90 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் டொரன்சோரோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து ஒடிசா அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Story first published: Saturday, December 28, 2019, 19:34 [IST]
Other articles published on Dec 28, 2019
English summary
ISL 2019-20 : Odisha FC vs Jamshedpur FC match 47 match result and highlights.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+