Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019-20 : அசத்திய ஒடிசா.. வலுவான மும்பை சிட்டி அணியை அடக்கி வீழ்த்தியது!!

புவனேஸ்வர் : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் ஒடிசா எஃப்சி அணி - மும்பை சிட்டி எஃப்சி அணிகள் இடையே ஆன லீக் போட்டி சனிக்கிழமை அன்று நடைபெற்றது.

இந்த பரபரப்பான மோதலில், வலுவான மும்பை சிட்டி அணியை 2 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஒடிசா எஃப்சி அணி அபார வெற்றி பெற்றது.

ISL 2019-20 : Odisha FC vs Mumbai City FC match 57 report

6ஆவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 57 ஆம் நாள் ஆட்டம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை சிட்டி அணி முதல் பாதி ஆட்டத்தைத் வலது புறமிருந்து தொடங்கியது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் கடுமையாக மோதின.ஆட்டத்தின் 35 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணிக்கு கோல் அடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது நழுவிப் போனது.

ஆட்டத்தின் முதல் பாதி இறுதி வரை இரு அணிகளுமே கோல் அடிக்காததால் 0 - 0 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றன.

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது ஆட்டத்தின் 48 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் அரிடேன் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

62 ஆவது நிமிடத்தில் மும்பை அணியில் மாற்றம் செய்யப்பட்டது. 62 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் டோரன் ஷோரேவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 72 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியில் மாற்றம் செய்யப்பட்டது.

ISL 2019-20 : Odisha FC vs Mumbai City FC match 57 report

74 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் சிஸ்கோ ஒரு கோல் அடித்து அசத்தினார். 81 மற்றும் 82 ஆவது நிமிடங்களில் இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.

84 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் வினித்துக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 86 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் அரிடேனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 87 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியில் மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ஆட்ட நேர முடிவில் 2 - 0 என்ற கோல் கணக்கில் ஒடிசா எஃப்சி அணி மும்பை சிட்டி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Story first published: Sunday, January 12, 2020, 11:10 [IST]
Other articles published on Jan 12, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+