For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ISL 2019-20 : மீண்டும் அடி.. நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தியது ஒடிசா!

புபனேஸ்வர் : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் ஒடிசா எஃப்சி மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் ஒடிசா எஃப்சி அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஆறாவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 82வது நாள் ஆட்டம் புபனேஸ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த சீசனில் இதுவரை 16 மேட்சுகள் ஆடி 21 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்தில் இருந்த‌ ஒடிசா எஃப்சி, 15 ஆட்டங்களில் 13 புள்ளிகள் பெற்று ஒன்பதாவது இடத்தில் இருந்த‌ நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியை நேருக்கு நேர் சந்தித்த‌து.

ISL 2019-20 : Odisha FC vs North East United FC match 82 report

தன்னுடைய கடந்த ஆட்டத்தில் ஏடிகே எஃப்சியிடம் தோல்வியை தழுவிய ஒடிசா எஃப்சி, வெற்றியை ருசித்து விட மும்முரமாக இருந்த‌து. அது மட்டுமில்லாது, புபனேஸ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டு அரங்கில் ஜனவரி கடைசி வாரம் வரை தான் பங்கு கொண்ட அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற‌ ஒடிசா எஃப்சி, ஜனவரி 29 அன்று தன் சொந்த மண்ணில் எஃப்சி கோவாவுக்கு எதிரே நடைபெற்ற போட்டியில் முதல் முறையாக‌ மண்ணை கவ்வியது.

ISL 2019-20 : Odisha FC vs North East United FC match 82 report

எனவே, அடிபட்ட சிங்கமாய் வெகுண்டு எழுந்தது. நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியோ, தனது கடந்த ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சிக்கு எதிராக ஆடி 3-3 என்ற கோல் கணக்கில் சமன் செய்து, புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள ஹைதராபாத் எஃப்சியை விட ஒரு படியே மேலே இருந்தது. அதற்கு முந்தைய ஆட்டங்களிலும் பெரிதாக சோபிக்கவில்லை. எனவே, கடைசி அணிகளில் ஒன்று என்ற பட்டத்தை தவிர்க்க அந்த அணி தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுத்தது.

டாஸ் வென்ற அணி நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி இடது புறமிருந்து தனது ஆட்டத்தை தொடங்கியது. 19வது நிமிடத்தில் அந்த அணியின் ரெடீமுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்க‌ப்பட்டது. சோர்வடைந்து இருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில்,

24வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் சாவேஸ் ஒரு கோல் அடித்து தனது அணியின் கணக்கை தொடங்கினார்.

ISL 2019-20 : Odisha FC vs North East United FC match 82 report

இருபத்து ஒன்பதாவது நிமிடத்தில், ஒடிசா எஃப்சி அணியின் ஷுபமுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 31வது நிமிடத்தில் அதே அணியின் வினித்துக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 35வது நிமிடத்திலும், 37வது நிமிடத்திலும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் லீயூடோவுக்கும், பிராதானுக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

45வது நிமிடத்தில் 2 கூடுதல் நிமிடங்கள் அளிக்கப்பட்டன. இதை தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் நார்த் ஈஸ்ட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில், ஒடிசா எஃப்சி தனது அணியில் இரு மாற்றங்களை செய்தது. இதை தொடர்ந்து, 47வது நிமிடத்தில் அந்த அணியின் ஓன்வு ஒரு கோல் அடித்தார். 61வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் தனது அணியில் ஒரு மாற்றத்தை செய்தது.

ரசிகர்களின் பலத்த ஆரவாரத்துக்கிடையே ஒடிசா எஃப்சி அணியின் பெரேஸ் குடஸ், 72வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். பின்னர் ஒடிசா தனது அணியில் 75வது நிமிடத்தில் மீண்டும் ஒரு மாற்றத்தை செய்தது.

81வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி ஒரு மாற்றத்தை செய்த நிலையில், 84வது நிமிடத்தில் அந்த அணியின் வாசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. அதே சமயம், ஒடிசா எஃப்சி அணியின் ஒன்வுக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

90வது நிமிடத்தின் முடிவில் 4 கூடுதல் நிமிடங்கள் அளிக்கப்பட்டன. ஒடிசா எஃப்சி அணியின் பெரேஸ் குடசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில் ஒடிசா எஃப்சி அணி 2-1 ‍ என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Photos Courtesy : ISL Media

Story first published: Saturday, February 15, 2020, 14:11 [IST]
Other articles published on Feb 15, 2020
English summary
ISL 2019-20 : Odisha FC vs North East United FC match 82 report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+