For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ISL 2019-20 : அரையிறுதியில் அசத்திய பெங்களூரு.. ஏடிகே அணியை வீழ்த்தி வெற்றி!

பெங்களூரு : ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் அரையிறுதி சுற்றின் இரண்டாம் ஆட்டம், பெங்களூரு எஃப்சி மற்றும் ஏடிகே எஃப்சி அணிகள் இடையே நடைபெற்றது. இதில் பெங்களூரு எஃப்சி அணி, ஏடிகே எஃப்சி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார‌ வெற்றி பெற்றது.

ஆறாவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக்கின் வெற்றியாளரை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கப் போகும் இந்த போட்டி, பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கன்டிராவா மைதானத்தில் நடந்த‌து.

ISL 2019-20 Semi final 2 : Bengaluru FC vs ATK match result and highlights

லீக் ஆட்டங்களில் தான் பங்கு கொண்ட 18 போட்டிகளின் மூலம் 34 புள்ளிகள் எடுத்து வலுவான இரண்டாம் இடத்தில் இருக்கும் ஏடிகே எஃப்சி அணி, 18 போட்டிகளில் 30 புள்ளிகள் எடுத்து அதற்கடுத்த மூன்றாவது இடத்தில் இருக்கும் பெங்களூரு எஃப்சி அணியை அதன் சொந்த மண்ணில் சந்தித்த‌து.

மார்ச் 14 அன்று நடக்க இருக்கும் ஐஎஸ்எல் இறுதி போட்டிக்கு வெல்லும் அணியை தீர்மானிக்கப் போகும் போட்டி என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த சீசனில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த‌ பெங்களூரு எஃப்சி, கடைசி சில லீக் ஆட்டங்களில் ஏனோ சொதப்பியது. அதுவும், தன்னுடைய கடந்த மேட்சை இதே ஏடிகே எஃப்சிக்கு எதிராக விளையாடி 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடித்ததால், இன்று எப்படியாவது அந்த அணியை வெல்ல வேண்டும் என்று மும்முரமாக இருந்தது.

ISL 2019-20 Semi final 2 : Bengaluru FC vs ATK match result and highlights

இந்த நிலையில், போட்டியில் டாஸ் வென்ற ஏடிகே எஃப்சி அணி இடது புறமிருந்து தனது ஆட்டத்தை தொடங்கியது.

31வது நிமிடத்தில் பெங்களூரு எஃப்சி அணியின் பிரவுன் சீனியர், ஒரு கோல் அடித்து தனது அணியின் கணக்கை தொடங்கினார். 36வது நிமிடத்தில் அந்த அணியின் ஜூனானுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்க‌ப்பட்டது. பின்னர் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் பெங்களூரு எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில், பெங்களூரு எஃப்சி தனது அணியில் 46வது நிமிடத்தில் ஒரு மாற்றத்தை செய்தது. கோல் எதுவும் அடிக்க முடியாத நிலையில் பெங்களூரு எஃப்சி தனது அணியில் 60வது நிமிடத்தில் இன்னொரு மாற்றத்தை செய்தது. 75வது நிமிடத்தில் அந்த அணியின் ஃப்ராடருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

76வது நிமிடத்தில் ஏடிகே எஃப்சி தனது அணியில் ஒரு மாற்றத்தை செய்தது. 82வது நிமிடத்தில் அந்த அணியின் சுமித் ரதிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 84வது நிமிடத்தில் பெங்களூரு எஃப்சி அணியின் நிஷுக்கு சிகப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. ஏடிகே எஃப்சி அணி ஒரு மாற்றத்தையும் செய்தது.

ISL 2019-20 Semi final 2 : Bengaluru FC vs ATK match result and highlights

86வது நிமிடத்தில் பெங்களூரு எஃப்சி அணியின் காப்ராவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. அந்த அணி ஒரு மாற்றத்தையும் செய்தது. 90வது நிமிடத்தில் 4 கூடுதல் நிமிடங்கள் அளிக்கப்பட்டன. பின்னர் ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில் பெங்களூரு எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஏடிகே எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Story first published: Monday, March 2, 2020, 14:42 [IST]
Other articles published on Mar 2, 2020
English summary
Photos Courtesy : ISL Media
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+