Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019 : விறுவிறுப்பான போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தியது ஏடிகே அணி!

கொல்கத்தா : கொல்கத்தாவில் நேற்று (மார்ச் 3) நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் ஏடிகே அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 90 ஆவது கால்பந்து போட்டி கொல்கத்தா விவேகானந்தா யுப பாரதி கிரிரங்கன் அரங்கில் ஏடிகே அணிக்கும் டெல்லி டைனமோஸ் எஃப்சி அணிக்கும் இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற எடிகே அணி வலது புறம் இருந்து ஆட்டத்தை தொடங்கியது.

ISL 2019 - ATK vs Delhi Dynamos FC match no 90 result

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் மிச் சிறப்பாக விளையாடின. அதுவும் ஏடிகே அணி வீரர்களின் ஆட்டம் ரசிக்கும்படி இருந்தது. ஆட்டத்தின் 20 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் கோமல் தட்டல் கோல் அடிக்க முயன்றார். ஆனால் அந்த கோல் அடிக்க முடியாமல் நழுவிப் போனது.

ISL 2019 - ATK vs Delhi Dynamos FC match no 90 result

ஆட்டத்தின் 25 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் பிரணாய்க்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து 41 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் ரிக்கிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ஆட்டத்தின் முதல் பாதி வரை இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து ஏடிகே மற்றும் டெல்லி டைனமோஸ் அணிகள் 0 - 0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.

இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. பின்னர் 63 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் எடு கார்சியா அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

ISL 2019 - ATK vs Delhi Dynamos FC match no 90 result

ஆட்டத்தின் 65 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் ராணா மாற்றப்பட்டு மொகமத் களமிறக்கப்பட்டார்.

இதே போல் 67 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் ரோமியோ மாற்றப்பட்டு நந்தகுமார் களமிறக்கப்பட்டார். இதையடுத்து ஆட்டத்தின் 72 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் நந்தகுமார் சேகர் ஒரு கோல் அடித்தார்.

ISL 2019 - ATK vs Delhi Dynamos FC match no 90 result

இதையடுத்து ஆட்டத்தின் 74 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் காலு உச்சே மாற்றப்பட்டு பல்வந்த் சிங் களம் இறக்கப்பட்டார். பின்னர் 83 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் யுலிசசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019 - ATK vs Delhi Dynamos FC match no 90 result

இதனைத் தொடர்ந்து 88 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் அங்கித் முகர்ஜி ஒரு கோல் அடித்தார்.
ISL 2019 - ATK vs Delhi Dynamos FC match no 90 result

இதையடுத்து இரு அணிகளுக்கும் 4 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. அந்த நான்கு நிமிடத்தில் இரு அணிகளுமே கோல் எதுவும் போடவில்லை. இதனைத் தொடர்ந்து ஏடிகே அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
Story first published: Monday, March 4, 2019, 10:55 [IST]
Other articles published on Mar 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+