Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019 : அந்த 4வது இடம் யாருக்கு? பரபரக்கும் ஏடிகே - ஜாம்ஷெட்பூர் மோதல்!

கொல்கத்தா : ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் போட்டிகளில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்க நடைபெறும் யுத்தம் தற்போது தீவிரமடைந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொல்கத்தா விவேகானந்தா யுகா பாரதி கிரிரங்கன் மைதானத்தில் ஏடிகே மற்றும் ஜாம்ஷெட்பூர் எஃப்.சி அணிகள் இன்று (பிப்ரவரி 3) களம் இறங்குகின்றன.

இந்த இரு அணிகளில் ஒன்று இந்த போட்டியில் வெற்றி பெற்றால் நான்காவது இடத்தைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது. அட்டவணையில் 20 புள்ளிகளுடன் ஜாம்ஷெட்பூர் அணி 5 ஆவது இடத்தில் உள்ளது. ஏடிகே அணி 17 புள்ளிகளுடன் மூன்று இடங்கள் பின் தங்கியுள்ளது.

ISL 2019 - ATK vs Jamshedpur FC match no-68 preview

கேரள அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் ஏடிகே அணி 1 - 1 என்ற கோல் கணக்கில் சமநிலை அடைந்தது. அந்த ஆட்டத்தில் கூட கடைசியாக 85 ஆவது நிமிடத்தில் தான் எடு கார்சியா ஒரு கோல் அடித்தார். அந்த ஆட்டம் ஏடிகே அணிக்கு ஏமாற்றமாகவே இருந்தது.

நாளை ஆட்டத்தில் அந்த பெங்களூரு அணியின் முன்னாள் வீரர் ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிராக நன்றாக விளையாடுவார் என ஏடிகே அணியின் பயிற்சியாளர் ஸ்டீவ் காப்பல் தெரிவித்தார்.

ISL 2019 - ATK vs Jamshedpur FC match no-68 preview

ஏடிகே அணியின் கார்சியாவுடன், மானுவல் லான்ஜாரோடும் இணைந்து விளையாடுவதால் ஜாம்ஷெட்பூர் அணிக்கு ஒரு பெரும் சவாலாக இருக்ககும். அவர்கள் மிக குறைவான கோல்கள் மட்டுமே அடித்து இந்த ஐஎஸ்எல் லீக் போட்டிகளில் மோசமான நிலையில் உள்ளனர். கார்சியா - மானுவல் லான்ஜாரோட் குறித்து கருத்து தெரிவித்த ஸ்டீவ் காப்பல், இருவரும் மிகச் சிறப்பாக விளையாடுவார்கள் என நம்புவதாக தெரிவித்தார்.

ஜாம்ஷெட்பூர் அணியைப் பொறுத்தவரை இந்த சீசனில் 8 டிராக்களைப பெற்றுள்ளது. எனவே அடுத்து வரும் போட்டிகளில் புள்ளிகள் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ISL 2019 - ATK vs Jamshedpur FC match no-68 preview

எங்களிடம் உள்ள வீரர்கள் நன்றாக விளையாடுகின்றன்ர், அவர்கள் இனி வரும் ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளனர். அடுத்து மும்பை மற்றும் புனேக்கு எதிரான ஆட்டங்களில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிறார் அந்த அணியின் பயிற்சியாளர் சீசர் ஃபெராண்டோ.

மான்செஸ்டர் போட்டிகளில் காயமடைந்து டிம் காஹில் வெளியேறினார். இதையடுத்து மார்கீ களம் இறங்குகிறார். அதே நேரத்தில் கார்லோஸ் கால்வோ இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது பயிற்சியாளர் சீசர் ஃபெர்ரண்டோவிற்கு பெரும் சிக்கலை கொடுத்துள்ளது.

ISL 2019 - ATK vs Jamshedpur FC match no-68 preview

கடைசி ஆட்டத்தில் சுப்ரதா பால் மிக நன்றாக விளையாடினார். இதையடுத்து ஜாம்ஷெட்பூர் அணி கொல்கத்தாவில் வெற்றி பெறுமா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கின்றனர்.

Story first published: Sunday, February 3, 2019, 11:51 [IST]
Other articles published on Feb 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+