Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019 : ஏடிகே அணியை வீழ்த்துமா மும்பை? பிளே ஆஃப் பரபரப்பு!

கொல்கத்தா : ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டித் தொடரில் முதல் நான்கு இடத்திற்குள் வர ஏடிகே மற்றும் மும்பை அணிகளுக்கிடையே கடும் போட்டி இருக்கிறது.

மும்பை சிட்டி அணி 26 போட்டிகளில் விளையாடி 27 புள்ளிகள் எடுத்துள்ளது. இந்த போட்டியில் ஜெயித்தால் கண்டிப்பாக பிளே ஆஃப் சுற்றுக்குள் முன்னேற முடியும். ஏடிகே அணி 21 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளதால் மும்பை அணியை துரத்திச் சென்று நான்காவது இடத்தைப் பிடிப்பது என்பது இயலாத காரியம்.

ISL 2019 - ATK vs Mumbai City FC match no 83 preview

இது குறித்து கருத்துத் தெரிவித்த ஏடிகே அணியின் பயிற்சியாளர் ஸ்டீவ் காப்பல், நான்காவது இடத்தைப் பிடிப்பது என்பது சற்று கடினமான விஷயம் என்றாலும் ஏடிகே அணியால் அது முடியும். எங்கள் அணியினர் கடும் முயற்சி செய்து விளையாடினால் எதுவும் சாத்தியமே என்று தெரிவித்துள்ள காப்பல், கால்பந்தைப் பொறுத்தவரை எப்போது, என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார்.

ISL 2019 - ATK vs Mumbai City FC match no 83 preview

புனே சிட்டி அணிக்கு எதிரான போட்டியில் ஏடிகே அணி 2-2 என்ற டிராவிலும், பெங்களூரு அணிக்கு எதிராக 3-0 என்ற கோல் கணக்கில் ஏடிகே அணி தோல்வியடைந்ததாலும், அந்த அணியின் பிளே ஆஃப் கனவு தகர்ந்து போனது. இதையடுத்து காப்பல் அணியினர் அடுத்து வரும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட பிளே ஆஃப் சுற்றைத் தொட முடியும் என்று கூற முடியாது.

ஏடிகே அணியைப் பொறுத்த வரை அதன் சொந்த மண் அதற்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. அங்கு நடைபெற்ற போட்டிகளில் ஒரு டிரா மற்றும் 3 வெற்றிகள் மட்டுமே கிடைத்துள்ளது. அந்த அணி வேறு மைதானங்களில் 7 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. அதே நேரத்தில் கொல்கத்தா அணிக்கு சொந்த மண்ணின் ஆதரவு இருப்பதால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

ISL 2019 - ATK vs Mumbai City FC match no 83 preview

மும்பை அணியைப் பொறுத்தவரை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது எளிது. கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அந்த அணி வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்கிறார் அந்த அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் கோஸ்டா. தொடர்ந்து 9 ஆட்டங்களில் பெற்ற வெற்றி அந்த அணிக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

கடந்த 3 போட்டிகளில் நாங்கள் சரியாக விளையாடவில்லை. எங்கள் அணி வீரர்கள் செய்த பல தவறுகளால் இடைநீக்கம் மற்றும் காயம் போன்றவை நிகழ்ந்தன. ஆனால் தற்போது எல்லாம் சரியாகி எங்களது அணி தயாராக உள்ளது என்கிறால் கோஸ்டா.

அடுத்து வரும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஏடிகே அணியாகட்டும் அல்லது மும்பை அணியாகட்டும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.

ISL 2019 - ATK vs Mumbai City FC match no 83 preview

இந்த போட்டி மட்டுமல்லாமல் புனே சிட்டிக்கு அணிக்கு எதிராக மும்பை அணியினர் இறுதி லீக் போட்டிக்கு முன்னேற இன்னும் நான்கு புள்ளிகளைப் பதிவு செய்ய வேண்டும். கடந்த மூன்று போட்டிகளில் மும்பை அணியினர் ஒரு கோல் கூட அடிக்காதது பயிற்சியாளர் கோஸ்டாவை மிகுந்த கவலை அடையச் செய்துள்ளது.

ஏடிகே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு இருந்தாலும், மும்பை அணி இந்த போட்டியில் வெற்றி பெறும் என்றே நம்பப்படுகிறது.

(Photos Courtesy - ISL)

Story first published: Friday, February 22, 2019, 10:28 [IST]
Other articles published on Feb 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+